இது france இல் அதிசயம் கடலுக்குள் ஒளிந்து கொள்ளும் Magic சாலை.!!

0
118

உலகின் அழகான சாலைகள் அபாயகரமான சாலைகளை பார்த்திருப்பீர்கள் ஆனால் இப்போது பார்க்கப்போகும் பிரான்ஸ் நாட்டிலுள்ள Magic சாலை சற்றே விந்தையானது இந்த சாலையில் தினசரி இரண்டு முறை மட்டுமே போக்குவரத்து நடைபெறும் மீதமுள்ள நேரங்களில் கடல் நீர் மட்டம் அதிகரித்து சாலை தண்ணீருக்குள் மறைந்து போகிறது

“France நாட்டின் North Atlantic கடல் பகுதியில் உள்ள Pierre வளை குடாவிலிருந்து Noirmoutier தீவை இந்த சாலை இணைக்கிறது இந்த சாலை 4 KM நீளம் கொண்டது Passage Du Gois என்று இந்த சாலை அழைக்கப்படுகிறது Gois என்றால் ஈரமான காலணிகளுடன் சாலையை கடந்து செல்வது என்று பொருள் கூறப்படுகிறது”

காற்று வீச்சு காரணமாக அலைகள் உயரே எழும்பும் போது இந்த சாலை கடல் நீருக்குள் மூழ்கிவிடுகிறது சுமார் 13 அடி உயரத்திற்கு கடல் நீர் மட்டம் ஏறி விடுகிறது தினசரி இரண்டு முறை மட்டுமே சாலையில் நீர் வடிந்து போக்குவரத்திற்கு பயன்படும் அதுவும் அதிகபட்சமாக 2 மணிநேரம் வரை மட்டுமே தண்ணீர் விலகி காணப்படும் அப்போது வாகனஙகளும் மக்களும் இந்த சாலையை கடந்து செல்கின்றனர்.

இந்த சாலை 1701ம் ஆண்டிலிருந்து வரைபடத்தில் இடம்பெற்றிருக்கிறதாம் 1840ம் ஆண்டு முதல் இந்த சாலையில் குதிரைகள் மூலமாக போக்குவரத்து துவங்கியதாக தெரிவிக்கப்படுகிறது தற்போது வாகனங்கள் மூலமாக தீவிற்கும் முக்கிய நிலப்பகுதிக்குமான போக்குவரத்து நடக்கிறது இந்த சாலையில் செல்வது மிகவும் ஆபத்தானதாக இருக்கிறது நடுவழியில் செல்லும் போது கடல் நீர் மட்டம் அதிகரித்து பலர் உயிரிழந்துள்ளனர் இதற்காக இந்த சாலையில் ஆங்காங்கே கோபுரங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன ஒரு வேளை தண்ணீர் மட்டம் அதிகரித்தால் இந்த கோபுரத்தில் ஏறி தப்பிக்கலாமாம் மீட்புக் குழுவினர் வரும் வரையிலோ அல்லது தண்ணீர் குறையும்போது கடக்க வேண்டும் கடல் நீர் மட்டம் உயர்வது குறித்து எச்சரிக்கை செய்வதற்கான மையமும் இந்த சாலையின் இருபுறத்திலும் செயல்படுகிறது இந்த சாலையில் பயணிப்பதற்காக உலகம் முழுவதும் இருந்து சாகச பயண பிரியர்கள் இங்கு வருகை தருகின்றனர்.

கடல் நீர் மட்டம் ஏறும் போது பயணிக்க விரும்புவதால் அதில் பலர் அலையில் சிக்கி உயிரிழந்திருக்கின்றனராம் எனவே மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டிய சாலையாக குறிப்பிடப்படுகிறது 1999ம் ஆண்டு Tour de France சைக்கிள் பந்தயத்தின் இரண்டாவது சுற்றுக்கு இந்த சாலை பயன்படுத்தப்பட்டது 2011ம் ஆண்டில் Tour de France சைக்கிள் பந்தயத்தின் முதல் சுற்றின் துவக்கப் புள்ளியாகவும் இந்த சாலை அமைந்தது குறிப்பிடத்தக்கது…

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here