8ஆவது மாடி பால்கனியில் ஊஞ்சல் ஆடிய குழந்தை – பொறுப்பற்ற தந்தையை விமர்சிக்கும் நெட்டிசன்ஸ்

0
61

80 அடி கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்பில் குழந்தை ஒன்றை ஊஞ்சலில் வைத்து ஒருவர் வேகமாக இயக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் கண்டனங்களுக்கு உள்ளாகியுள்ளது.

ஐஸ்லாந்தில் உள்ள புவேர்ட்டோ ரிக்கோ என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு ஒன்று உள்ளது. அந்தக் குடியிருப்பின் எட்டாவது மாடியில் வசிக்கும் ஒருவர், தன் குழந்தையை பால்கனியில் உள்ள ஊஞ்சலில் வைத்து ஆட்டுகிறார். அப்போது அவர் ஊஞ்சலை மிக வேகமாக இயக்கியதாகத் தெரிகிறது. இதில் குழந்தை பால்கனியின் விளிம்பு வரை சென்றுவிட்டுத் திரும்புகிறது. இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த ஒருவர் அதை வீடியோ எடுத்து சமூக வலைத் தளத்தில் கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் வெளியிட்டார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த 70,000க்கும் மேற்பட்ட சமூக வலைத்தள வாசிகள் அவரின் பொறுப்பற்ற செயலுக்கு தங்களது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து பிரபல ஆங்கில இணையதளமான மிரர் குறிப்பிட்டுள்ள செய்தியில் “ இந்த வீடியோ மெக்சிகன் ஹெரால்டு பத்திரிகையில் பணிபுரியும் ஜொனதன் பாடிலா என்ற பத்திரிகையாளரால் எடுக்கப்பட்டது” எனக் கூறியுள்ளது.

இது குறித்து ஜொனாதன் கூறும் போது “பால்கனியில் ஒருவர் குழந்தையை எந்த வித பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் ஊஞ்சலில் வைத்து மிக வேகமாக ஆட்டினார். அவர் அந்தக் குழந்தைக்குத் தந்தையாக இருக்க வாய்ப்பு இருக்கிறது”. என்று கூறியுள்ளார்.

(புதிய தலைமுறை செய்தி)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here