550 உயிரினங்களை இலங்கையிலிருந்து எடுத்துச் செல்ல முயற்சித்த 3 ரஷ்ய பிரஜைகள்

0
82

நுவரெலியா ஹோர்ட்டன் தேசிய சர­ணாலயத்திலிருந்து பிடிக்கப்பட்ட 23 இனங்களைச் சேர்ந்த 550 உயிரினங்­களை மிகவும் சூட்சுமமான முறையில் இலங்கையிலிருந்து எடுத்துச் செல்ல முற்பட்ட மூன்று ரஷ்ய நாட்டு பிரஜைகள் குறித்த உயிரினங்களைப் பிடிப்பதற்காகப் பயன்படுத்திய இரசாயன திராவகத்தை கண்டறிவதற்கு உத்தரவிடப்­பட்டது.

இலங்கையில் அழிவடையும் ஆபத்தை எதிர்கொண்டுள்ள ஓணான்கள், தேள்கள், தவளைகள், பல்­லி கள், நத்தைகள், சிலந்திகள், பாம்­புகள் உட்பட 550 உயிரினங்களை பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டி­ருந்த பெட்டிகளில் அடைத்து அவர்கள் கொண்டு செல்ல நடவ­டிக்கை எடுத்திருந்த நிலையி­லேயே இவர்கள் வனத்துறை அதிகா­ரிகளால் கைது செய்யப்பட்டனர்.

பின்னர் அவர்கள் நுவரெலியா நீதி­மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்­கமறியலில் வைக்குமாறு உத்தர­விடப்பட்டுள்ளது. அத்துடன், வனத்­துறை அதிகாரிகளால் கைப்பற்றப்­பட்ட உயிரினங்களுள், உயிருடன் இருப்பவற்றை விடுவிப்பதற்கும், ஏனையவற்றை ஆய்வுக்காக அனுப்­புமாறும், உயிரினங்களை பிடிப்ப­தற்காக பயன்படுத்தப்பட்டுள்ள இரசா­யன திராவகத்தை கண்டறிவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நீதி­மன்றம் உத்தரவிட்டது.

இம்மூவரும் பலவகையான இரசா­யனத் திரவாகங்களைப் பயன்படுத்­தியே ஹோர்ட்டன் தேசிய சரணால­யத்தில் இந்த உயிரினங்களை பிடித்துள்ளனர் என்றும், உயிரினங்களுக்கான சிறப்பு கொள்கலன்களில் அடைத்தே அவற்றை கொண்டு செல்ல முற்பட்டுள்ளனர் என்றும் வனத்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here