ஹன்டா வைரஸ் (Hantavirus) என்றால் என்ன?

0
337

கொரோனா வைரஸ் பீதி உச்ச கட்டத்தில் உள்ளபோது, சீனாவில் இருந்து வரும் இன்னொரு வைரஸின் செய்தி மக்களை பெரும் அச்சத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த வைரஸ் ஒரு ஆட்கொல்லி வைரஸ் என்பதில் சந்தேகமில்லை. ஆனால் கொரொனா போன்று மனிதனிலிருந்து மனிதனுக்கு பரவுவதாக இதுவரை கண்டறியப்படவில்லை. இவை பொதுவாக எலிகள் மூலமே மனிதர்களிடம் பரவுகிறது கொண்டது.

நாய் பூனைகள் மூலம் இந்த நோய் பரவ முடியுமா என்று உலகில் பல பல ஆய்வு செய்யப்பட்டு இருந்தாலும், இதுவரை இவ்விலங்குகள் மூலம் இந்த நோய் பரவ முடியும் என்பது கண்டறியப்படவில்லை. ஆனால் நாய்கள்,பூனைகள் இந்த நோயை காவும் விலங்குகளை பிடிக்கும்போது மனிதர்களுக்கு பரவுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று சில ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.

அனேகமாக எலிகளின் சிறுநீரை மனிதர்களிடம் படும்போது இந்த நோய் மனிதனிற்கு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

அத்துடன் அண்மைய ஆய்வுகள் எலிரிகளால் பாதிக்கப்பட்ட உணவுகளை உண்பதன் மூலமும் இந்த நோய் ஏற்படலாம் என்ற கருத்து பரவலாக முன்வைக்கப்படுகிறது.

அனேகமாக காடுகள் ,விவசாய நிலங்கள் போன்ற இடங்களில் பரவுவது அடயாளம் காணப்பட்டு இருந்தாலும் ,அமெரிக்காவின் நிவ்யோர்க் நகரில் ஒரு வகை சிறிய எலி மூலம் பரவுவது கண்டறியப்பட்டுள்ளது.

சோர்வு காய்ச்சல் மூட்டுக்கு மூட்டு வலி இடுப்புப் பகுதிகளில் வலி போன்றன இதன் ஆரம்ப அறிகுறிகளாக ஏற்படும்.
அத்துடன் தலைவலி வாந்தி எடுத்தல் வயிற்று வலி பேதி போன்ற நிலைமைகள் இதனால் ஏற்படும்.

10 நாட்களின் பின்பு கடும் இருமல் ,சுவாச சிரமம் ,நுரையிரலில் திரவம் நிறைதல் போன்ற ஆபத்தான நோய் அறிகுறிகள் ஏற்பட்டு மரணத்தைக் கூட ஏற்படுத்தக்கூடியது.

இதுபயங்கரமான நோய்.கொரொனாவை விட பயங்கரமானது, ஏனெனில் இதன் இறப்பு வீதம் 38% .

என்றாலும் மிக அரிதாகவே மனிதனிலிருந்து மனிதனுக்கு இந்த நோய் தொற்றுதல் ஏற்படுகிறது. எனவே இது ஒரு Pandemic ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் மிகக் குறைவாகும்.

எமக்கு உள்ள மிகப்பெரிய கவலை வளர்ந்த நாடுகள் இந்த வைரஸ்களை வைத்துக்கொண்டு அவற்றை எவ்வாறு உயிரியல் ஆயுதமாக பயன்படுத்தலாம் என்று ஆய்வு செய்யப்படுவதாகும். ஏனெனில் இதுவும் இலகுவாக மாற்றங்களை ஏற்படுத்த முடியுமா RNA வைரஸ் ஆகும்.

என்றாலும் நாம் கொரானா அளவுக்கு இந்த வைரஸ் பரவல் தொடர்பில் இப்போதைக்கு அச்சப்படத்தேவை இல்லை.

எம்.என் முஹம்மத் (ஆசிரிய ஆலோசகர் -விஞ்ஞானம்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here