வெப்ப நிலையை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகள் !!

0
53

தற்பொழுது நிலவும் வெப்பத்துடனான காலநிலையை எதிர்கொள்வதற்காக பல்வேறு ஆலோசனைகள் தொடர்பாக சமூக விசேட வைத்தியர் கபில ஜயரத்ன கருத்து தெரிவித்துள்ளார்.

சுற்றாடல் வெப்பநிலை வழமை நிலையிலும் பார்க்க உயர் மட்டத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடும் வெப்பம் மற்றும் அதன் மூலம் மனித உடலுக்கு ஏற்படக்கூடிய பாதிப்பு நிலை தொடர்பாக ஊடகங்கள் மூலம் பல்வேறு ஆலோசனைகள் வழங்கப்படுவதுடன் அது தொடர்பில் சரியான தெளிவு முக்கியமானதாகும்.

பொதுவாக உடல் வெப்பநிலை வியர்வை வெளியேறுவதன் மூலம் கட்டுப்படுத்த முடியும். இருப்பினும் சுற்றாடலில் ஏற்படும் வெப்ப அதிகரிப்பினால் இந்த செயற்பாடுகள் உரிய முறையில் இடம்பெறாது. தற்பொழுது இலங்கையில் சுற்றாடல் ஈரப்பதன் 90 சதவீத அதிகரிப்பு சுட்டணைக் கொண்டுள்ளது.

கடும் வெப்பநிலை சிலருக்கு சிலவேளை பாதிப்பான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். சிறுவர்கள், 4 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள், 65 வயதுக்கு மேற்பட்ட நபர்கள், கடுமையாக சேர்வடைவோர் மற்றும் நோயாளர்கள் விசேடமாக அவதானத்துடன் செயற்படுவது முக்கியமானதாகும்.

தற்பொழுது நிலவும் வெப்பத்துடனான காலநிலையினால் உடலுக்கு ஏற்படும் தாக்கத்தை குறைத்துக்கொள்வதற்கு கூடுதலான நீரைப் பருகுதல் முக்கிய நடவடிக்கையாகும்.

அதிக அளவில் பணிகளில் ஈடுபடும் போது பொதுவான தாகத்துக்காக பெற்றுக்கொள்ளப்படும் தண்ணீரின் அளவுவிலும் பார்க்க ஆக கூடுதலான தண்ணீரை பருகுவது அவசியமானதாகும்.

உடல் சோர்வடையும் சந்தர்ப்பங்களில் மணித்தியாலத்துக்கு 2 இற்கும் 4 இற்கும் இடைப்பட்ட வகையில் ஒரு கப் நீரை பருகுவது பொருத்தமானதாகும். இது விசேடமாக சிறுவர்களுக்கும் வயதானவர்களுக்கும் அத்தியாவசியமாகும்.

உணவு வகைகளுக்கு பொதுவான வகையில் சேர்க்கப்படும் உப்பின் மூலம் தேவைப்படும் அளவு தாதுப்பெருள் கிடைக்கும். அனைத்து தராதரங்களைச் சேர்ந்த நபர்கள் விசேடமாக சிறுவர்கள் உடலால் இயலக்கூடிய அளவில் பணிகளில் ஈடுபடவேண்டும்.

உடல் பயிற்சியில் காலையில் அல்லது மாலையில் ஈடுபடுவது பொருத்தமானதாகும். உடல் பயிற்சியில் ஈடுபடுவோர் அடிக்கடி பயிற்சியை நிறுத்தி நிழல் உள்ள இடங்களில் ஓய்வெடுப்பது பொருத்தமானதாகும். சிறுவர்கள், ஏனைய நபர்கள் முடிந்தளவு எப்பொழுதும் உள்ளரங்குகளில் அல்லது நிழல் உள்ள இடங்களில் இருக்க வேண்டும்.

குளிரூட்டப்பட்ட இடமாக இருக்குமாயின் மிகவும் சிறந்ததாகும். குளிர்ந்த நீரில் குளித்தல் அல்லது உடம்பை கழுவுவதன் மூலம் வெப்பத்தைக் குறைத்துக்கொள்ள முடியும்.

மென்மையாக உடைகளை அணிவது பொருத்தமாகும். தலையை மூடும் அளவிலான துணிகளை அணிவது முக்கியமானதாகும். சூரிய ஒளி தலையில் படாத வகையில் தொப்பி, குடை போன்றவற்றை அணிவது பொருத்தமானதாகும்.

இவ்வாறான காலப்பகுதியில் பொது மக்கள் மேற்கொள்ளக்கூடாத சில விடயங்களும் உண்டு. வெப்பமான உணவு அல்லது திரவம் விசேடமாக சூடான தேனீரைப் பயன்படுத்துவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். இவ்வாறானோர் அதிக வெப்பத்தில் அல்லது சூரிய ஒளியில் இருந்து பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

கூடுதலான குளிர் அல்லது இனிப்புடனான பானங்களை அருந்துவது பொருத்தமற்றதாகும். மதுசாரங்களை பயன்படுத்துவதும் ஏற்புடையதாகாது.

நபர் ஒருவர் உடல் சோர்வுக்கு உள்ளாகும் பொழுதும், மூச்சு எடுப்பதில் சிரமம் போன்றவை ஏற்படுமாயின் உடனடியாக பணிகளை நிறுத்தி நிழல் உள்ள இடம் அல்லது குளிர் இடங்களில் ஓய்வு எடுத்துக்கொள்ள வேண்டும்.

தலைப் பாரம் அல்லது மயக்க நிலை ஏற்படுமாயின் ஏனையோருக்கு தெரிவிக்க வேண்டும். சூரிய ஒளியினால் சருமம் சிவக்கக்கூடும். உடல் அரிப்பும் ஏற்படக்கூடும். சில வேளைகளில் தீக்காயம் அல்லது கொப்பளங்கள் ஏற்படக்கூடும். சன் கிறீம் மூலம் இவற்றை தடுக்க முடியும். சருமத்தில் அரிப்பு விசேடமாக, கழுத்தில், மார்பில் அல்லது மார்புக்கு அருகாமையில் ஏற்படக்கூடும்.

குளிர் இடங்களில் இருத்தல் மற்றும் சருமத்தை குளிராக வைத்துக்கொள்ளுதல் இவ்வாறானவற்றை தவிர்த்துக்கொள்ள முடியும். சூரிய வெப்பத்தினால் குழந்தைகளுக்கு தீக்காயங்கள் போன்ற அறிகுறிகள் காணப்படுமாயின் பொருத்தமான வைத்தியரை நாடுவது முக்கியமானதாகும். தசைப் பிறழ்வும் ஏற்படக்கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் உப்புடனான திரவத்தை பருகுதல் மற்றும் ஓய்வுடன் இருக்க வேண்டும்.

இனிப்புடனான திரவ பானங்களை பருக முடியும். இருப்பினும் ஒரு மணித்தியாலத்திற்குள் வழமையான நிலை ஏற்படாவிட்டால் வைத்தியரை நாடவேண்டும்.

கடும் வெப்பத்தின் காரணமாக சிலருக்கு (Heat Strokes) வெப்ப பக்கவாதம் ஏற்படக்கூடும். வெப்பத்தை கட்டுப்படுத்த முடியாமல் போனால் மூளை மற்றும் நரம்பு கட்டமைப்பில் பாதிப்பு ஏற்படக்கூடும்.

பக்கவாதமும் ஏற்படக்கூடும். இலங்கையில் பக்கவாதம் பெருமளவில் காணப்படுகின்றது. விசேடமாக கடும் வெப்ப காலநிலையில் மிகவும் அவதானத்துடன் செயற்படவேண்டும்.

சிறுவர்கள், 4 வயதுக்கு குறைந்த பிள்ளைகள் மற்றும் 65 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் வெப்பநிலை மாற்றத்துக்கு மத்தியில் தமது உடல் வெப்பநிலையை சமனான நிலையில் வைத்துக்கொள்வதற்கு முயற்சிக்க வேண்டும்.

புத்திசாலித்தனத்துடன் செயற்படுதல் மற்றும் உரிய வைத்திய ஆலோசனையை பின்பற்றுவதன் மூலம் இவ்வாறான அதிக வெப்பநிலையுடனான காலத்திலான பாதிப்பை தவிர்த்துக்கொள்ள முடியும் என்று சுகாதார பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here