வாக்குறுதி வழங்கினார் ஜனாதிபதி – பட்டதாரிகளுக்கு நியமனம் மற்றும் பயிற்சிகள் ஆரம்பம்

0
89

நாட்டிலுள்ள அனைத்து வேலையற்ற பட்டதாரிகளையும் அரச சேவையில் இணைத்துக்கொள்ளும் வேலைத்திட்டத்தின் படி மேற்கொள்ளப்பட்ட அனைத்து வேலைத்திட்டங்களை சரியான முறையில் பூர்த்தி செய்யப்படும் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் பொலன்னறுவையில் மக்களை சந்தித்தபொழுது ஒரு சில பட்டதாரிகள் நேரடியாக அவரிடம் தங்கள் நியமனம் மற்றும் பயிற்சிகள் ஆரம்பித்தல் தொடர்பில் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்கையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறியதாவது பட்டதாரிகளின் நியமன நடவடிக்கைகள் முன்னெடுக்கும்போது கொரோனா காணப்பட்டமையாலும் தேர்தல் அறிவிக்கப்பட்ட காலத்தில் நியமனத்தை கொடுக்க முடியாமையாலேயே பயிற்சிகள் ஆரம்பிக்க முடியாமல் போனதாகவும் கூறினார் எனினும் தேர்தலின் பின்னர் இரு வாரங்களில் நிச்சயம் தெரிவு செய்யப்பட அனைத்து பட்டதாரிகளுக்கும் நியமனம் தொடர்பான நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டு உரிய வகையில் பயிற்சிகள் இடம்பெறும் என்று உறுதி மொழி வழங்கினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here