வலய அமைப்புக்கள்

0
160

உலக நாடுகள் பல்வேறு சந்தர்ப்பங்களுக்காக வேறு நாடுகளுடன் தொடர்புகளை வைத்துக் கொள்வதுடன் அவை சர்வதேச தொடர்புகளாக அறிமுகம் செய்யலாம். அவ்வாறு உலகில் அனைத்து நாடுகளும் தனது சுதந்திரம், தனித்துவம், பாதுகாப்பு பற்றி அவதானம் செலுத்தும் அவ்வாறு ஒரு நாட்டின் செயல்படுத்தப்படுகின்ற அரசியல் சமூக பொருளாதார விளைவுகளை இன்னுமொரு நாட்டில் செயற்படுத்துகின்ற கொள்கைப் பொருத்தபாடு அற்றதாகும். எனினும் இனரீதியில் தனித்துச் செயற்படுத்துவதற்கு எந்தவொரு நாட்டுக்கும் முடியாது.

சுதந்திர அரசுகள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட அங்கத்தும் பெறல்,  அந்நாடுகளின் தனித்துவம், ஒத்துழைப்பு, ஆகியவற்றுக்காக செயற்படுகின்ற  சமூகம், பொருளாதாரம் காலசாரம் செயற்பாடுகளுக்காக சலுகைகளை வழங்கி பல்வேறு கட்டணங்களை வழங்கும் நிறுவனங்கள் சர்வதேச அமைப்புகளாக அறிமுகம் செய்யப்படும்.

ஐக்கிய நாடுகள் சபை உலகலாவிய ரீதியில் செயற்படுகின்ற பிரதான சர்வதேச அமைப்பாகும். வலய அமைப்புகளின் பண்பானது ஏதாவது ஒரு வலயத்தைக் கொண்டு உருவாக்கப்படல் எனினும் சில சந்தர்ப்பங்களில் பூகோள வலயத்திற்கு அப்பால் காணப்படுகின்ற நாடுகளும் சில வலய அமைப்புகளில் அங்கத்துவம் பெறுகின்றன. தற்காலத்தில் உலகில் அனைத்து பூகோள வலயங்களும் அங்கத்துவம் பெறும் வகையில் வலய அமைப்புக்களை ஏற்படுத்தியுள்ளது.

பிரதேச ரீதியில் அமைக்கப்பட்ட சில வலய அமைப்புக்களில் பிரதானமாக பின்வருவனவற்றை ஆராய்வோம்.

•தென்னாசிய நாடுகளின் கூட்டமைப்பு (சார்க்) – SAARC

• தென்கிழக்காசிய நாடுகளின் கூட்டமைப்ப (ஆசியான்) – ASEAN

•பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார தொடர்புகளுக்கான வங்களா விரிகுடா வலய அமைப்பு (பிம்ஸ்ரெக்) – BIMSTEC

• ஆசிய பசுபிக் வலய பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு(எபெக்) – APEC

• ஐரோப்பியக் கூட்டமைப்பு( ஐரோப்பிய யூனியன்)- EU

• ஐரோப்பிய பொருளாதாரச் சமூகம்- EEC

• ஐரோப்பிய சுதந்திர வர்த்தகச் சங்கம்- EFTA

1)  தென்னாசிய நாடுகளின் கூட்டமைப்பு (SAARC)

•  ஆங்கில விரிவு   –   (South Asian Association for Regional Cooperation – SAARC)

• அமைப்பினை ஏற்படுத்துவதற்காக 1970 பங்களாதேசத்தின் ஜனாதிபதியான சியா உல் ரஹூமான் ஆலோசனை வழங்கினார்.

• 1983 ஜூன் மாதம் புதுடில்லி நகரில் வலய வெளிநாட்டு செயலாளர்களின் மூலம் ஒத்துழைப்பினை வழங்கி 9 துறைகள் பற்றிய திட்டமிடலை முன்வைத்தனர். இதனை புதுடில்லி ஆலோசனை எனக் கூறலாம்.

•  விவசாயம் கிராம அபிவிருத்தி தொடர்பாடல் வானிலை விஞ்ஞானம், சனத்தொகை செயற்பாடு, போக்குவரத்து, தபால்சேவை, விஞ்ஞானமும், தொழினுட்பமும், விளையாட்டு, கலை, கலாசார செயற்பாடு ஆகிய 9 துறைகள் ஆகும்.

•   1985 டிசம்பர் 8 ஆந் திகதி பங்களாதேசில் டாக்கா நகரில் தென்னாசிய வலய ஒத்துழைப்பு அமைப்பு (SAARC) சம்பிரதாயப் பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.

2)  சார்க் (SAARC) அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள்

இலங்கை, இந்தியா, பங்களாதேஸ், மாலைதீவுகள், பாகிஸ்தான்,நேபாளம்,  பூட்டான், ஆப்காணிஸ்தான்

3) சார்க் அமைப்பின் நோக்கங்கள்

• தென்னாசிய நாடுகளிடையே கூட்டு நம்பிக்கையை அபிவிருத்தி செய்தல் மற்றும் வலுப்றெச் செய்தல் என்பவற்றுக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

• பயங்கரவாதத்தை ஒழித்தல் மற்றும் அரசியல் உறுதியின்மையைப் போக்குதல் என்பன தொடர்பில் வலயத்தின் பொதுப்பிரச்சினைகளின் போது சர்வதேச ரீதியில் வலயமட்ட அடிப்படையில் முன்வருதல்.

• உணவுக்காப்பை ஏற்படுத்துவதற்காக சார்க் விவசாய நிலையம் மற்றும்பாதுகாப்பான உணவுக் களஞ்சியத்தையும் பங்களாதேசில் அமைத்தல்.

•  பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு அரசு மட்டத்தில் தலைவர்கள் தீர்மானங்களை மேற்கொள்ளுதல் , பயங்கரவாதத்தை தவிர்ப்பதற்கான உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துதல்.

•  தென் ஆசிய நாடுகளின் வறுமையை ஒழித்தல்.

• பொருளாதார முன்னேற்றம், சுகாதாரப் பிர்சினைகளுக்குத் திர்வு காணுதல் என்பவற்றுக்காக ஜப்பான் சார்க் வெளிநாட்டு நிதியம், தென் ஆசியா அபிவிருத்தி நிதியம் என்பவற்றின் மூலம் நிதி மற்றும் பொருள் உதவிகளை வழங்குதல்.

• வர்த்தகம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை இழிவளவாக்குவதற்கு தென்ஆசிய முன்னுரிமை வர்த்தக உடன்படிக்கையை(SAPTA)  நடைமுறைப்படுத்தல், தென் ஆசிய சுதந்திர வர்த்தகப் பிரதேசத்தை(SAFTA)  ஏற்படுத்தல்.

4) தெற்காசிய நாடுகளின் வர்த்தக ஒப்பந்தம் (SAPTA)  கொண்டுள்ள 4 விடயங்கள்

• அங்கத்துவ நாடுகளின் பொருளாதாரம் , கைத்தொழில்துறைகளில் வரிவிலக்களித்தல், வெளிநாட்டு வர்த்தகம் தொடர்பாக அவதானத்தை ஏற்படுத்தி ஒவ்வொருவருக்கும் மானியம் வழங்கும்வகையில் செயற்பாடுகளை மேற்கொள்ளல்.

• ஒப்பந்தம் செயற்படுத்தலின்போது படிப்படியாக பரீட்சித்து பெருகின்ற அனுபவத்தின் ஊடாக அதனை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான செயற்பாடுகளை மேற்கொள்ளல்.

•  மிகக்குறைந்த அபிவிருத்தி காணப்படும் நாடுகளின் தேவைக்கேற்ப முறைகள் தொடர்பான ஒத்துழைப்பினை ஏற்படுத்தல்.

• மூலப்பொருள், முடிவுப்பொள், அரைகுறைப்பொருள் போன்ற அனைத்து உற்பத்திகளுடன் தொடர்புடைய ஒப்பந்தத்தினை மேற்கொள்ளல்.

5)   தென்கிழக்காசிய நாடுகளின் சங்கம் (ஆசியான்)

•  ஆங்கில விரிவு –  (The Association of South East Asian Nations – ASEAN)

•  1967 ஆகஸ்ட் 8 இல் தாய்லாந்தின் பாங்கொக் நகரில் அங்கத்துவ நாடுகள் 5 கலந்துகொண்டு இவ்வமைப்பு தாபிக்கப்பட்டது.

6)  ஆசியான் (ASEAN) அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள்

தாய்லாந்து, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, கம்போடியா, வியட்னாம், மலேசியா, மியன்மார், புரூணை, லாவோஸ்

7)   ஆசியான் அமைப்பின் நோக்கங்கள்

• வலயத்தின் சமாதானம் ஸ்திரத்தன்மை என்பவற்றை உறுதிப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

•  இயற்கைஅழிவுகளின்போது அன்னியோன்னிய உதவிகள் வழங்குதல்.

• பொருளாதார அபிவிருத்திக்கு ஒத்துழைப்பு வழங்குதலும் வர்த்தகத்தை மேம்படுத்தலும்.

• விலங்கு வேளான்மை அபிவிருத்தி வன அபிவிருத்தித் திட்டங்களுக்கு நியுசிலாந்தின் ஆதரவைப் பெறுதல்.

•   மின்பீடி அபிவிருத்திக்கு கனடாவின் உதவியைப் பெறுதல்.

•  இயற்கை அழிவுகளின்போது அவற்றை முன்கூட்டியே எதிர்வு கூறுதல்.

• தெரிவு செய்யப்ப்பட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளில் இடர்தொடர்பாடல் கேந்திர நிலையங்களை அமைத்தல்.

•  ஆசியாவின் விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்பக் குழுக்களை அமைத்தல்.

•  வர்த்தகம் தொடர்பான சவால்களை வெற்றி கொள்வதற்கு அந்நாடுகளுக்கு நிவாரணம் அளிக்கும் சுங்கவரிக் கொள்கையை நடைமுறைப்படுத்தல்.

8)  ஐரோப்பிய சங்கம் (European Union)

• ஐரோப்பிய சங்கத்தின் அங்கத்துவ நாடுகள் 27 இணை உட்படுத்திய பொருளாதார அரசியல் சங்கமாகும்.

•  1993 நவம்பர் 1 ஆம் திகதி மாஸ்ரிச் சங்கம் (Treaty of Mastricht)  எனும் பெயரில் ஐரோப்பிய சங்கம் ஸ்தாபித்துள்ளது.

•  ஆரம்பத்தில் 6 நாடுகள் அங்கத்துவம் பெற்றன. அவை பெல்ஜியம், பிரான்ஸ், மேற்கு ஜேர்மனிய குடியரசு, இத்ததாலி, லக்சம்பேர்க், நெதர்லாந்து ஆகியன. தற்போது அங்கத்துவ நாடுகளின் எண்ணிக்கை 27 ஆகும்.

•  ஐரோப்பிய சங்கம் அங்கத்துவ நாடுகளுக்குகிடையில் பொதுப் பண அலகு யூரோ என அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

• தற்போது 16 நாடுகள் யூரோ நாணயத்தைப் பயன்படுத்துவதுடன் அந்நாடுகளை உள்ளடக்கிய வலயம் யூரோ வலயம் என அறிமுகம் செய்யப்படுகின்றது.

• அன்மையில் ஐக்கிய ராட்சியம் அமைப்பிலிருந்து விலகிக்கொண்டது.

9)  ஐரோப்பிய யூனியனில்(EU) அங்கம் வகிக்கும் நாடுகள்

ஐக்கிய ராச்சியம், அயர்லாந்து, பிரான்சு, ஸ்பெயின், போர்த்துக்கல், லக்சம்பேர்க், இத்தாலி, ஒஸ்திரியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவானியா, மோல்டா, கங்கேரி, பெல்ஜியம், நெதர்லாந், டென்மார்க், ஜேர்மனி, கிரீஸ், சுவீடன், வத்வியா, பின்லாந்து, எஸ்டோனியா, லிதுவேனியா, போலாந்து, செக் குடியரசு, சைபிரஸ்

10)  ஐரோப்பிய யூனியனின் உப நிறுவனங்கள்

• ஐரோப்பிய கமிசன்

• ஐரோப்பிய அமைச்சர்கள் கவுன்சில்

• ஐரோப்பிய பாராளுமன்றம்

• ஐரோப்பிய நீதிமன்றம்

11) ஐரோப்பிய யூனியனின் நோக்கங்கள்

• அங்கத்துவ நாடுகளுக்கிடையே தடைகள் வரிகள் அற்ற விதத்தில் கட்டற்ற வர்த்தகத்தினை தோற்றுவித்தல்.

• அங்கத்துவம் பெறாத ஏணைய நாடுகளுடனான வர்த்தகத்தில் பொதுவான வர்த்தகத் தடைகளை நிர்வகித்தல்.

• பிராந்திய நாணய முறையில் பொதுவான நாணய நிதிக் கொள்கை ஒன்றினைக் கடைப்பிடித்தல்.

• மூலதன, ஊழிய, தொழில்நுட்ப அம்சங்களில் அங்கத்துவ நாடுகளுக்கு ஒத்துழைப்பினை வழங்குதல்.

• தனியொரு நாணயம் மற்றும் நாணய விவகாரங்களுக்கான தனியான ஐரோப்பிய வங்கி என்பவற்றினை தாபிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

•  ஐரோப்பிய யூனியனில் அங்கம் வகிக்கும் நாடுகள் பயன்படுத்தும் பொதுவாண நாணயத்தின் அலகு யூரோ எனப்படுகின்றது.

12) ஐரோப்பிய பொருளாதாரச் சமூகத்தில் (EEC)  அங்கம் வகிக்கும் நாடுகள்

பிரான்ஸ், ஜேர்மனி, பெல்ஜியம், லக்சம்பேர்க், நெதர்லாந்து, இத்தாலி, ஐக்கியராச்சியம், அயர்லாந்து, டென்மார்க், கிரீஸ்

13) ஐரோப்பிய பொருளாதாரச் சமூகத்தின் நோக்கங்கள்:-

• பொருளாதார ஒருமைப்பாட்டின் மூலம் அரசியல் ஒருமைப்பாட்டை உருவாக்குதல்.

• தமது அமைப்பிலுள்ள நாடுகளுக்கான வரிகளை நீக்கியதுடன், ஏணைய நாடுகள் மீது ஒரே வகையான வரியினை விதித்தல்.

• தமது அமைப்பு நாடுகளுக்குள் எந்த நாட்டிலும் அமைப்பிலுள்ள நாடுகளிலிருந்து வெலைவாய்ப்பை பெறுதல், எந்தவொரு உறுப்பு நாட்டிலும் முதலீடு செய்தல்.

14)  யூரோ நாணய அலகு அறிமுகம் செய்யப்பட்டமைக்கான காரணங்கள்

• சங்கத்தின் நாடுகளுக்கிடையில் பொருட்கள் பரிமாற்றத்தின்போது ஒவ்வொரு நாடும் பல்வேறு பண அலகுகளை பரிமாற்றம் செய்யும்போது ஏற்படும் பாதிப்பினை தவிர்த்தல்.

•   அங்கத்துவ நாடுகள் நாணயமாற்றில் ஏற்படும் பாதிப்பைக் குறைத்தல்.

• ஐக்கியமான ஐரோப்பாவினை கட்டியெழுப்புவதற்கு ஐரோப்பிய பொருளாதாரத்தை உருவாக்க அத்திவாரமிடல்.

•  அமெரிக்க டொலருக்கு பதிலாக பலம் வாய்ந்த மாற்றுநடவடிக்கை ஒன்றினை முன்வைத்துடொலருக்கு பதிலாக யூரோவின் விஸ்தீர தன்மையை ஏற்படுத்தல்.

15)  ஆபிரிக்க பொருளாதார ஆணைக்குழு

• 1958 ஐக்கிய நாடுகளில் பொருளாதார சமூக அமைப்பில் வலய ஆணைக்குழு 5 ஆகும். அதில் ஒன்று ஆபிரிக்க பொருளாதார ஆணைக்குழு.

• ஆபிரிக்க நாடுகளின் அபிவிருத்தியை குறித்து அங்கத்துவ நாடுகள் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு உதவுதல், வலய ஒத்துழைப்பினை வளர்த்தல், உள்நாட்டு ஒத்துழைப்பினை அபிவிருத்தி செய்வதற்கு இவ்வாணைக்குழுவை ஏற்படுத்தியமை அடிப்படை நோக்கமாகும்.

• ஆபிரிக்க பொருளாதார ஆணைக்குழுவின் நோக்கங்களையும் குறிக்கோளையும் அடைவதற்கும், செயற்பாடுகளை ஒழுங்கமைப்பதற்கும் இரு தலைப்புகளின் கீழ் செயற்படுவதற்கு ஒழுங்கமைக்கப்பட்டது.

16)  ஆபிரிக்க கொருளாதார ஆணைக்குழுவின் முக்கிய இரு தலைப்புகள்

• வலய ஒத்துழைப்பின் மூலமாக ஆபிரிக்க சங்கத்தின் எதிர்பார்ப்பின் முக்கியத்தை உணர்தல்.

•  ஆபிரிக்க நாடுகளில் விசேட சந்தரப்பத்தினூடாக வெளிப்படும் பூகோள சவால்களை இனங்காணல்.

17) ஆபிரிக்க பொருளாதார ஆணைக்குழுவின் செயற்பாடுகள்

•  வர்த்தகம், அடிப்படை வசதிகள் பற்றிய வலய தொடர்புகளை விருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுத்தல்.

• அபிவிருத்திக்காக தகவல் தொடர்பாடல் தொழினுட்பம், விஞ்ஞான தொழினுட்ப முறைகளை பயன்படுத்தல்.

•  அந்நாடுகளின் நன்மை கருதி, வலய நாடுகளின் இடையிலான ஒத்துழைப்பு, தனித்துவம், சமூக உறவு ஆகியவற்றை அபிவிருத்தி செய்வதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளல்.

• அங்கத்துவ நாடுகளுக்கும் சிறந்த பயனை பெற்றுக்கொடுப்பதற்கான செயற்பாடுகளை மேற்கொண்டு ஆபிரிக்க பொருளாதார ஆணைக்குழு பிரதேச காரியாலங்கள் 5 உள்ளன.

•   அங்கத்துவ நாடுகளின் அபிவிருத்திக்காக நவீன மயப்படுத்தப்பட்ட சேவைகள் சில கீழே தரப்பட்டுள்ள பிரிவுகளின் கீழ் பரவல் அடையச் செய்வதற்கு ஆபிரிக்க பொருளாதார ஆணைக்குழு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அடிப்படைக் கொள்கையும் அறிவுரையும், பங்களிப்பின் அபிவிருத்தி (அங்கத்துவ நாடுகள்), தொழினுட்பவியலாளர் பங்களிப்பு, தொடர்பாடல், அறிவு பரிமாற்றம், பிரதேச வலய செயற்பாட்டுக்கு ஒத்துழைத்தல், பிரதேச பொருளாதார சமூக அமைப்பு.

18) ஆபிரிக்க பொருளாதார ஆணைக்குழுவின் அங்கத்துவ நாடுகள்

பொட்சுவானா,  அல்ஜீரியா,  செனகல், கமரூன் , அங்கோலா,  செட்குடியரசு, எகிப்து, பெனின்,  டொங்கொ, எசுத்திரியா,  பர்கினாபாசோ,  லெசத்தோ, எதியோப்பியா, புரூண்டி,  லைபீரியா, செம்பியா,  கேப்டவுன, மடகாஸ்கார், கானா,  கொமரோஸ,; சிம்பாவே, கென்யா,  கைபோன்,  செம்பியா, ஜியூஜிட்டி, கினியா, மொசாம்பிக், லிபியா,  மத்திய கினியா,  டியூனிசியா, மலாவி,  தன்சானியா,  மத்தியஆபிரிக்கா, மொலிசன்,  ரூவாண்டா,  சுவிஸ்லாந்து, உகண்டா,  மாலி,  சூடான், நம்பியா,  கொங்கோ குடியரசு,  நைஜர், நைஜீரியா,  சியாராலியோன் , ஐவரிகோஸ்ட், சீசெல்ஸ்,  மொராக்கோ , தென் ஆபிரிக்கா, சோமானியா, கொங்கோ, மொரிட்டேனியா

19)வடஅமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்

•  வடஅமெரிக்க வலயத்தினுள் முக்கூட்டு  வர்த்தகம் என அமெரிக்க ஐக்கிய குடியரசு, கனடா, மெக்சிக்கோ ஆகிய நாடுகளின் இடையே ஆன ஒப்பந்தமாகும்.

• இவ்வர்த்தக ஒப்பந்தம் 1994 முதல் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.

• இது ஐக்கிய அமெரிக்க குடியரசுக்கும் கனடாவுக்கும் இடையில் நடைபெறும் ஐக்கிய குடியரசு கனடாவுக்கு சுதந்திர வர்த்தக விசேட ஒப்பந்தமாக கருதப்படும்.

• வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மேலதிகமாக இரு செயற்பாடுகளைக் கொண்டுள்ளது.

   1. வடஅமெரிக்க சுற்றாடல் ஒத்துழைப்பு ஒப்பந்தம்

   2. வட அமெரிக்க தொழிலாளர் ஒத்துழைப்பு ஒப்பந்தம்

20) வடஅமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் நடவடிக்கைகள்

•   வட அமெரிக்க சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தின் பிரதான குறிக்கோள் ஐக்கிய அமெரிக்கா குடியரசு, கனடா, மெக்சிக்கொ. ஆகிய நாடுகளுக்கு இடையில் வர்த்தகத்தையும் முதலீடு தொடர்பான தடைகளை நீக்குதல்.

•  இதற்கமைய 1994 இல் ஐக்கிய அமெரிக்கா குடியரசு மெக்சிக்கோவில் இருந்து இறக்குமதி செய்யும் பண்டவகையின் இறக்குமதி அரைப் பங்கு ஐக்கிய அமெரிக்க குடியரசு கனடாவில் ஏற்றுமதி செய்யும்போது மூன்றில் ஒரு பங்கு வரிவிலக்கு அளிக்கப்படுகிறது.

• பத்து வருடங்களுக்குள் ஐக்கிய அமெரிக்கா குடியரசு மெக்சிக்கோவுக்கு ஏற்றுமதி செய்கின்ற விவசாய உற்பத்தி பொருட்கள் தவிர்ந்த ஏனைய அனைத்து பொருட்களுக்கும் தீர்வை வரியினை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது.

•  கனடா ஐக்கிய அமெரிக்க குடியரசுக்கும் இடையில் அனேகமான வர்த்தக கொடுக்கல் வாங்கல் நடைபெறுவது தீர்வை வரி இன்றி ஆகும்.

21) பிம்ஸ்ரெக் (BIMSTEC) அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள்

இந்தியா, மியன்மார், இலங்கை, நேபாளம், மலேசியா, தாய்லாந்து, பங்களாதேஸ், பூட்டான்

22)  பிம்ஸ்ரெக் அமைப்பின் நோக்கங்கள்

• பயங்கரவாதத்தை ஒடுக்குதல் மற்றும் வண்முறைகளுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

• இயற்கை அழிவுகளை கட்டுப்படுத்துவதற்கு வானிலை அவதான நிலையங்களை அமைத்தல் தொடர்பாக கவனம் செலுத்துதல்.

•    வர்த்தகம், முதலீடு ஆகிய நடவடிக்கைகளை மேம்படுத்தல்.

• பண்டங்களை ஏற்றி இறக்குதல் தொடர்பாடல் நடவடிக்கைகளை மேம்படுத்துதல்.

• சுற்றுலா நடவடிக்கைகள், மீன்பிடி நடவடிக்கைகள், விவசாயத்தை முன்னேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

•  வறுமையை ஒழிப்பதற்கு ஒன்றிணைந்து பொதுவான கொள்கையைப் பின்பற்றுதல்.

•    உயிர்ப்ல்வகைமையைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் எடுத்தல்.

• சூழல் மற்றும் இயற்கை அழிவு என்பவற்றை முகாமைத்துவப் படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்தல்.

23)  எபெக் (APEC) அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள்

புரூணை, யப்பான், தென்கொரியா, நியுசிலாந்து, மெக்சிக்கோ, மியன்மார், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா, மலேசியா, கனடா, பப்புவா நியுகினி, ஹொங்கொங், ஐக்கிய அமெரிக்கா, அவுஸ்ரேலியா, சீனா

24) எபெக் அமைப்பின் நோக்கங்கள்

• வர்த்தகம் தொடர்பான சவால்களை இழிவளவாக்குவதற்கு வலயத்தில் முதலீடு மற்றும் வர்த்தக நடவடிக்கைகளை முன்னேற்றுதல்.

• ஆசிய பசுபிக் வலய இணைப்பினால் பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்தவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளல்.

• வறுமை ஒழிப்பிற்கு உரிய மனித வள அபிவிருத்திக்காக தொழிலின்மைக்குஉதவி, வேலையற்றோருக்கு நிவாரணம் வழங்குதல், காப்புறுதி முறை ஆரம்பித்தல்.

•  கோளமயமாதலின் பாதகமான விளைவுகள் ஏற்படுவதைத் தடுப்பதற்கு வலயநாடுகள் ஒன்றுசேர்ந்து தீர்மானங்களை மேற்கொள்ளுதல்.

• இந்த அமைப்பின் மூலம் சுதந்திர வர்த்தகத்தை ஏற்படுத்துவதற்கு உதவும்முகமாக வலயநாடுகளிடையே அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல், தொழில்நுட்பஒத்துழைப்பு வழங்கதல், உலக வங்கி நிதியிலிருந்து பொருளாதார உதவிகளைப் பெறுதல்.

25)  ஒபெக் (OPEC) அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள்

• வெனிசுவலா, ஈக்குவடோர், அல்ஜீரியா, லிபியா, நைஜீரியா, அங்கோலா, ஈராக், சவூதி அரேபியா, ஈரான், கட்டார், குவைத், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இந்தோனேசியா

26)   ஒபெக் அமைப்பின் நோக்கங்கள்

• பெற்றோலியத்தை வாங்கும் நாடுகள் தாம் நிர்ணயித்த மலிவான விலையிலேயே பெற்றோலியத்தை வாங்கி வந்தன. இதனால் பெற்றோலிய உற்பத்தி நாடுகள் பாதிப்படைந்தன. இந்நிலைமையை மாற்றி அமைப்பதற்காக 1960 இல் பக்தாத்தில் கூடிய மகாநாட்டில் தீர்மானமெடுத்து ஒபெக் அமைப்பினை தாபித்தன.

• எண்ணெய் உற்பத்தி நாடுகள் தாம் அமெரிக்க, பிரான்சிய எண்ணெய்க் கம்பனிகளால் சுரண்டப்பட்டதை மனதிற் கொண்டு தமது விலையை தீர்மானித்தன.

•  ஒபெக் அமைப்பு நாடுகளை பொருளாதார பின்னடைவிலிருந்து மீட்டெடுத்தல்.

27) ஐரோப்பிய சுதந்திர வர்த்தகச் சங்கத்தில் (EFTA) அங்கம் வகிக்கும் நாடுகள்

ஆஸ்திரியா, பின்லாந்து, ஐஸ்லாந்து, நோர்வே, போர்த்துக்கல், சுவீடன், சுவீற்சலாந்து

28)  ஐரோப்பிய வர்த்தகச் சங்கத்தின் செயற்பாடுகள்

•  மேற்கு ஐரோப்பிய நாடுகள் தமது வர்த்தக விருத்திக்காக அமைத்துக் கொண்ட நிறுவனமே இதுவாகும்.

•  உறுப்பு நாடுகள் தம்மிடையே வர்த்தக நடவடிக்கைகளைச் சுங்கத்தீர்வை வர்த்தகக் கட்டுப்பாடுகள் என்பன தளர்த்தப்பட்ட விதத்தில் நடாத்தி வருகின்றன.

•  இவ் அமைப்பில் டென்மாக்கும், ஐக்கிய ராச்சியமும் தொடக்கத்தில் அங்கத்துவ நாடுகளாகவிருந்தன. பின்னர் 1973 இல் ஐரோப்பிய பொருளாதாரச் சமூகத்தில் அங்கத்துவம் பெற்றதும் விலகிவிட்டன.

29) பெநெலக்ஸ் (BENELUX) அமைப்பில் அங்கம் வகிக்கும் நாடுகள்

பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பேர்க்.

30)   பெநெலக்ஸ் அமைப்பின் செயற்பாடுகள்

•  அமைப்பிலுள்ள நாடுகளுக்கிடையே பரஸ்பர வர்த்தகத்திற்கு சுங்கவரி எதுவும் அறிவிடப்படுவதில்லை.

•  ஏனைய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு ஒரே விதமான சுங்கவரியை விதித்தல்.

• இவ் அமைப்பிலுள்ள பெல்ஜியத்தில் நிலக்கரியுண்டு, லக்சம்போக்கில் இரும்புத்தாது உண்டு. நெதர்லாந்தில் இவையில்லை. ஆனல் அந்நாடுகளின் ஒத்துழைப்பினால் மூன்று நாடுகளிலும் இரும்புருக்கு உற்பத்தி இடம்பெறுகின்றது.

31) உங்ராட் (UNCTAD) அமைப்பு

• பொருளாதார வளம்மிக்க நாடுகள், பொருளாதாரத்தில் சிரழிந்திருக்கும் நாடுகளுக்கு ஒத்துழைப்பு அளிப்பதற்காக உருவாக்கப்பட்ட நிறுவனங்களில் ஒன்றே உங்ராட் நிறுவனமாகும்.

• இது ஐக்கிய நாடுகளின் வர்த்தகம், அபிவிருத்தி ஆகியவற்றுக்கான ஆணைக்குழு என அழைக்கப்படுகின்றது.

•   ஜெனிவாவில் 1964 இல் இந்த நிறுவனம் கூட்டப்பட்டது.

• உலக நாடுகளுக்கிடையே சர்வதேச வர்த்தகம் தொடர்பாக அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்கான ஒரு வழிமுறையாக இம்மாநாடு கூட்டப்பட்டது.

•    உங்ராட் அமைப்பில் 150 நாடுகள் அங்கம் வகிக்கின்றன.

32) அங்கத்துவ நாடுகளின் பொருளாதாரத்தை விருத்தி செய்வதற்காக மேற்கொள்ளும் நடவடிக்கைகள்

•   வர்த்தகததிற்குத் தடையான தீர்வை வரிகளைக் குறைப்பதன் மூலம் அல்லது முற்றாக நீக்குவதன் மூலம் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் உற்பத்திப் பொருட்களுக்கு அபிவிருத்தியடைந்த நாடுகளில் சந்தைகளைப் பெறுதல்.

• அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் தமக்குத் தேவையான உணவுப்பொருட்களையும் முடிவுப்பொருட்களையும் அபிவிருத்தியடைந்த நாடுகளிடமிருந்து இறக்குமதி செய்து வருகின்றன.

•  இந்த இறக்குமதிப் பொருட்களின் விலைகள் தளம்பாமல் பார்த்துக் கொள்வதுடன் அவற்றிற்கு நியாயமான விலையில் பெற்றுக் கொடுப்பதற்கு உத்தரவாதமளித்தலும் இந்நிறுவனத்தின் பணியாகும்.

•  அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் வருமானம் ஒருசில ஏற்றுமதிப் பொருட்களில் தங்கியிருப்பதால் அவை பொருளாதார நெருக்கடிக்க தள்ளப்படுகின்றன. இத்தகைய நிலையைத் தடுத்து அந்நாடுகளின் உற்பத்தித்துறையைப் பன்முகப்படுத்துவதற்கு உங்ராட் முயல்கின்றது.

•  அபிவிருத்தியடைந்துவரும் நாடுகளில் இன்று கைத்தொழில் உற்பத்திகள் அதிகரித்து வருகின்றன. ஆனால் உற்பத்திப் பொருட்களை விற்பதற்கு பெரும் சிரமம் தோன்றியுள்ளது. அபிவிருத்தியடைந்த நாடுகளின் முடிவுப் பொருட்களுடன் போட்டியிட்டுச் சந்தை வாய்ப்பினைப் பெறுதல் கடினமாகவுள்ளது. அந்த இடர்பாட்டைத் தீர்ப்பதற்கு உங்ராட் முயல்கின்றது.

33) பிரிக்ஸ்(BRICS) கூட்டமைப்பு

• பொருளாதார வல்லரசாக மாறும் வாய்ப்புள்ள நாடுகளின் கூட்டமைப்பாக பிரிக்ஸ் கூட்டமைப்பு காணப்படுகின்றது.

• பிரிக்ஸ் கூட்டமைப்பில் இந்தியா, ரஸ்யா, சீனா, பிறேசில், தென்னாபிக்கா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன. ஆரம்பத்தில் பிரிக்  என்ற பெயரில் நான்கு நாடுகளுடன் காணப்பட்ட இக்கூட்டமைப்பானது தென்னாபிக்காவின் இணைவுடன் பிரிக்ஸ் என மாற்றம் பெற்றது.

•   பிரிக் எனும் சுருக்கத்தை கோல்டமன் சார்ச்ஸ் நிறுவனத்தின் உலகப் பொருளாதார ஆய்வு வல்லுனர் ஜிம்ஓநில் என்பவர் 2001 ஆம் ஆண்டில் உருவாக்கினார்.

•  முதலாவது மாநாடு 2009 ஜுன் மாதம் 16 ஆம் திகதி ரஸ்யாவின் எகடேரின்பேக் என்ற நகரில் நடைபெற்றது.

34) பிரிக்ஸ்(BRICS) நாடுகளின் கொள்கை

• பிரிக்ஸ் நாடுகள் தங்களுடைய அரசியல், பொருளாதார விடயங்களில் ஒத்துழைப்புடன் செயற்படுதல்.

• தமது உறுப்பு நாடுகளில் கைத்தொழில் மூலப்பொருட்களையும், சந்தைகளையும் வழங்குதல்.

•  நான்கு நாடுகளும் 2050 ஆம் அண்டளவில் உலகின் 5 பொருளாதார வல்லரசாக உருவாகுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளல்.

35) ஆபிரிக்க ஒன்றியம் (African Union)

• ஆபிரிக்க நாடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேச அமைப்பாக ஆபிரிக்க ஒன்றியம் காணப்படுகின்றது.

•  ஆபிரிக்க கண்டத்தில் உள்ள மொறாக்கோ என்ற சாட்டைத் தவிர ஏனைய அனைத்து நாடுகளும் (53 நாடுகள்) இவ் அமைப்பில் அங்கம் வகிக்கின்றன.

•  எகிப்து, மடகஸ்கார், கினிபிசாவு, மத்திய ஆபிரிக்கக் குடியரசு ஆகிய நான்க நாடுகளும் அந்நாடுகளில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளின் பின்னர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளன.

• கெயிட்டி, கசகஸ்தான் ஆகிய இருநாடுகளும் பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றுள்ளன.

•  2001 மே 21 இல் அடிஸ்அபாபாவில் உருவாக்கப்பட்டு 2002 ஜீலை 09 இல் தென்னாபிக்காவில் நிறுவப்பட்டது.

36) ஆபிரிக்க ஒன்றியத்தின் நோக்கங்கள்

• அனைத்து நாடுகளையும் ஒரே அரசியல், பொருளாதார, பாதுகாப்பு குடையின்கீழ் கொண்டுவருவதே ஆபிரிக்க ஒன்றியத்தின் தொலைநோக்காகும்.

•   ஆபிரிக்க கண்டத்தில் மக்களாட்சியை நிறுவுதல்.

•  மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுத்தல்.

•  தாங்குகின்ற பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல்.

•  உள்ளுர் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணுதல்.

•   ஆபிரிக்க பொதுச் சந்தை ஒன்றினை உருவாக்குதல்

தொகுப்பு:- ச.அக்‌ஷயன்,  ஆசிரியர்,  இ / தேலை தமிழ் மகா வித்தியாலயம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here