வங்காள தேச கிரிக்கெட் அணியின் வீரர் மோர்தசா கொரோனாவிலிருந்து குணமடைந்தார்

0
111

வங்காள தேச கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மோர்தசா. இவர் தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் அவாமி லீக்கின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.
இவருக்கு கடந்த மாதம் 20-ந்தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. கடந்த 24 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நேற்றுமுன்தினம் நெகட்டிவ் வந்துள்ளது. இதனால் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளார்.

இதுகுறித்து மோர்தசா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘எனக்கு மீண்டும் எடுக்கப்பட்ட பரிசோதனையில் நெகட்டிவ் வந்தது. எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்று தெரிவித்துக் கொள்கிறேன். எனது மனைவி கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு இரண்டு வாரங்களாக சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். அவர் ஆரோக்கியத்துடன் உள்ளர். அவருக்காவும் பிரார்த்தனை செய்யுங்கள்.

நான் வீட்டில் இருந்தே சிகிச்சை பெற்றேன். கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் நேர்மறை எண்ணத்துடன் இருங்கள். கடவுள் மீது நம்பிக்கை வைத்து விதிமுறைகளை பின்பற்றுங்கள். நான் அனைவரும் ஒன்றாக இணைந்து கொரோனாவை எதிர்த்து போரிடுவோம்’’ எனத் தெரிவித்துள்ளார்.

இவருடன் நஃபீஸ், நஸ்முல் இஸ்லாம் ஆகியோரும் மூன்று வாரத்திற்கு முன் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தற்போது அவர்களும் குணமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here