ரிஷாட்டின் மனைவி, சகோதரரின் வங்கிக் கணக்குகளை பரிசோதிக்க உத்தரவு.

0
72

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் மனைவி மற்றும் சகோதரர் ஆகிய இருவரதும் வங்கிக்
கணக்குகளைப் பரிசோதித்து, அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு, கல்கிஸை நீதவான் உதேஷ் ரணதுங்க, குற்றப்புலனாய்வுத் திணைக்களத்துக்கு, நேற்று (28) உத்தரவிட்டார்.

லங்கா சதொர நிறுவனத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி ஒன்று குறித்த தேடுதல் நடவடிக்கையின் போது கண்டுபிடிக்கப்பட்ட ஆவணங்கள் குறித்த வழக்கு, இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே, நீதவான் மேற்கண்டவாறு உத்தரவிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here