ரியாலிட்டி நிகழ்வுகள், விளம்பரங்கள் போன்றவைக்கு சிறுவர்களை பயன்படுத்துவதில் புதிய கட்டுப்பாடுகள்

0
40

தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்வுகள், விளம்பரங்கள் மற்றும் டிவி விளம்பரங்களுக்கு  போன்றவற்றில் சிறுவர்களைப் பயன்படுத்துவது குறித்து கடுமையான வழிகாட்டுதல்களை அறிமுகப்படுத்த தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை  தீர்மானித்துள்ளது.

13 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளை தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களுக்கு பயன்படுத்துவதை தடைசெய்து எதிர்காலத்தில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்று அதிகார சபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபதிரண தெரிவித்தார்.


இலங்கையில் உள்ள அனைத்து தொலைக்காட்சி அலைவரிசைகளும் இந்த வழிகாட்டுதல்களைக் கடைப்பிடிக்க வேண்டியிருக்கும் என்றும், இணங்கத் தவறும் அலைவரிசைகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் விதானபதிரண கூறினார்.

தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களுக்குப் பயன்படுத்தப்படும் சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்வது குறித்து தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன.

இது தொடர்பாக  ஊடக அமைச்சுடன் தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும், வழிகாட்டுதல்களின் வரைவு நகல் கடைசி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் பேராசிரியர் முதித விதானபதிரண தெரிவித்தார்.

மூன்று வயதிற்குட்பட்ட குழந்தைகளை விளம்பரங்களுக்கு பயன்படுத்த அனுமதிக்கும் சட்டங்களை திருத்துவதற்கும், சர்வதேச தரத்தின்படி வயது வரம்பை 13 மற்றும் அதற்கு மேற்பட்டவர்களாக உயர்த்துவதற்கும் ஒரு திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது.

குழந்தைகள் சர்வதேச விளம்பரங்களுக்கும், தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் கார்ட்டூன்களுக்கும் குரல் கொடுப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் விளம்பரங்களை கண்காணிக்கவும் கட்டுப்படுத்தவும் ஒரு சிறப்பு பிரிவு நிறுவப்பட்டுள்ளது.

ஒரு தனியார் தொலைக்காட்சி நிலையத்தில் ஒரு ரியாலிட்டி ஷோவுக்கான 54 வயதான அரங்க வடிவமைப்பாளர் பன்னிபிட்டியாவில் உள்ள அவரது வீட்டில் பல  சிறுவர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரு ஆங்கில ஆசிரியராகவும் காட்டிக் கொண்ட அந்த நபர்,  ஆண் மாணவர்களை தனது வகுப்பிலிருந்து தனது இல்லத்திற்கு கூட்டிச் சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

துஷ்பிரயோகம் செய்யப்பட்ட குழந்தைகளின் பல்வேறு படங்கள் மற்றும் காட்சிகளை காவல்துறையினர் கண்டுபிடித்துள்ளனர், அவை சந்தேக நபரால் வெளிநாடுகளுக்கு விற்கப்பட்டதாக சந்தேகிக்கப்படுகிறது.
2018 முதல் இந்த நபர் பல வயதுக்குட்பட்ட ஆண் குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here