முன்னணி இயக்குனரின் மகன் மரணம்

0
150

இயக்குனர் ராஜ்கபூர் தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் அறியப்பட்ட ராஜ்கபூரின் மகன் ஷாருக் கபூரில் மெக்காவுக்குப் பயணம் சென்ற போது இறந்துள்ளார்.

தாலாட்டு கேட்குதம்மா படத்தின் மூலம் அறிமுகமான ராஜ்கபூர் பின்னர் அஜித்தை அவள் வருவாளா , ஆனந்த பூங்காற்றே, ஆகிய படங்களை இயக்கினார். மேற்கொண்டு படங்களை இயக்கினாலும் பெரிதாக வெற்றி பெறாத காரணத்தால் நடிப்பில் புகுந்தார். தற்போது சினிமாவை விட தொலைக்காட்சிகளில் அதிகமாக தலைகாட்டி வருகிறார்.

ஷாருக் கபூர்ஷாருக் கபூர்
ராஜ் கபூருக்கு ஷஜீலா கபூர் என்ற மனைவியும், ஷாரூக் கபூர் என்ற ஒரு மகனும், ஷமீமா கபூர், ஷானியா கபூர் என்ற இரண்டு மகள்களும் உள்ளனர்.
அவரது மகன் ஷாருக் தனது தாயுடன் மெக்காவுக்கு சென்றிருந்தார். அங்கு உள்ள தட்பவெப்ப நிலை ஒத்துக் கொள்ளாமல் மூச்சுத்திணறல் ஏற்பட்டு ஷாருக் கபூர் உயிரிழந்துள்ளதாக சொல்லப்படுகிறது. அவரது உடலை இந்தியா எடுத்து வராமல் மெக்காவிலேயே அடக்கம் செய்ய அவரது குடும்பம் முடிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here