முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் திறந்த போட்டி பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் அனைவருக்குமான முக்கிய அறிவிப்பு

0
61

கடந்த வாரம் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்த முகாமைத்துவ சேவை உதவியாளர் திறந்த விண்ணப்பத்தில் பரீட்சைக் கட்டணம் செலுத்துவதற்கான பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அவர்களின் கணக்கிலக்கம் தமிழ் மொழியில் வெளிவந்த வர்த்தமானி அறிவித்தலில் பிழையாக அச்சிடப்பட்டிருப்பது அவதானிக்கப்பட்டுள்ளது. 

சிங்களம் மற்றும் ஆங்கிலம் ஆகியவற்றில் கணக்கிலக்கம் 20-03-02-13 என்றும் தமிழ் வர்த்தமானியில் 02-03-02-13 (படம் 3) என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக பல விண்ணப்பதாரிகள் எந்த கணக்கிலக்கம் சரியானது என வினவிவருகின்றனர்.
இதற்கு முன் கோரப்பட்ட ஏனைய தமிழ் மொழி மூல விண்ணப்பங்களையும் ஆராய்ந்து பார்த்ததில் சிங்களத்திலும் ஆங்கிலத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள கணக்கிலக்கமே சரியானது என்பதை உறுதிப்படுத்த முடிந்தது. 

எனவே, தமிழ் விண்ணப்பதாரிகளும்  20-03-02-13 என்ற கணக்கிலகத்திற்கே கட்டணம் செலுத்த வேண்டும் என்பதை உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம்.

(teachmore.lk)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here