மறு அறிவித்தல் வரை வெளிநாடுகளில் உள்ளவர்கள் குவைத்திற்குள் உள் நுழைய தடை

0
46

ஸ்ரீலங்கா உட்பட பல நாடுகளில் இருந்து வருபவர்களுக்கு மறு அறிவித்தல் வரும் வரை தடை விதிக்கப்பட்டுள்ளதாக குவைத் அரச தொடர்பாடல் நிலையம் இன்று தெரிவித்துள்ளது.

இருப்பினும் அந்நாட்டில் வசிப்பவர்களுக்கு குவைத்தில் இருந்து வெளியேறவும் உள் வருவதற்குமான அனுமதியை வழங்க அந்நாட்டு அமைச்சரவை முடிவு செய்துள்ளது.
எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திலிருந்து வர்த்தக விமான சேவைகள் பகுதி அளவில் ஆரம்பிக்கப்படும் என்று கடந்த மாதம் குவைத் அறிவித்திருந்தது.

ஆயினும் கொரோனா வைரஸ் தொற்று நிலையை அடுத்து அந்நாட்டு விமான சேவைகள் வழமைக்குத் திரும்பும் நிலையில், மேலும் ஒரு வருட காலம் வரை விமான நிலையத்தின் முழுச் செயற்பாட்டையும் வழமைக்கு கொண்டு வருவதை எதிர் பார்க்க முடியாது என குவைத் அரசு தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here