மட்டு.மாவட்ட முஸ்லிம் சமூகத்தின் சிந்தனைக்கு

0
71

முஹம்மது றினாஸ் சுபைர்

2020இல் நாம் விட்ட பிழையினால் மூன்றாகப் பிரிந்து எமக்குரிய ஆசனமொன்றையிழந்து ஒருவர் மீது ஒருவர் பழி சுமத்துகின்றோம்.

2020 தேர்தல் எமக்கு பல பாடங்களைக் கற்றுத்தந்திருக்கின்றது.

பிரதேசவாதமற்று, கட்சிகள், சின்னம் குழுக்களற்று ஒன்றாகப் பயணியுங்கள். எதிர்காலத்தில் எமது பிரதிநிதித்துவத்தை அதிகமாகப் பெற்றிடலாம்.

நாம் ஒன்றுபட்டு ஒரே சின்னத்தில் ஒன்றாகப் போட்டியிட்டிருந்தால் மட்டக்களப்பிலிருந்து மூன்று முஸ்லிம்களை நாம் பாராளுமன்றம் அனுப்பியிருக்கலாம்.

மட்டக்களப்பிலிருந்து எவ்வாறு மூவரை பாராளுமன்றம் அனுப்ப முடியுமென்ற கேள்வியும் எண்ணமும் எழலாம்.

இதோ 2020 தேர்தலே சான்று….

கல்குடா முஸ்லிம் பிரதேசம் 29268, காத்தான்குடி, அதனை அண்டிய பிரதேசம் 32097, ஏறாவூர் 21233, அதனை அண்டிய முஸ்லிம் பிரதேசம் 700-1000, தபால் மூல வாக்குகள் உட்பட மொத்தமாக முஸ்லிம் பிரதேசத்திலிருந்து 84000 க்கும் அதிகமான வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன.

இவற்றுள் செல்லுபடியற்ற வாக்குகள் 3000 என்று வைத்துக்கொண்டாலும், 81000 வாக்குகள் அளிக்கப்பட்டிருக்கும்.

மட்டக்களப்பில் TNA பெற்றுக்கொண்ட வாக்குகள் 79182. அவர்கள் பெற்றுக்கொண்ட ஆசனம் 2. நாம் ஒன்றுபட்டு செயற்பட்டிருந்தால், அந்த இரண்டு ஆசனம் எமக்கு கிடைத்திருக்கும்.

அப்படியானால், மூன்றாவது ஆசனம் எவ்வாறு கிடைக்கத்தோன்றும்? AITC நாடு பூராகவும் பெற்றுக்கொண்ட வாக்குகள் 67766.

அவர்களுக்கு ஒரு தேசியப்பட்டியல் கிடைத்திருக்கிறது. அதே போல், OPPP நாடு பூராகவும் பெற்றுக்கொண்ட வாக்குகள் 67758. அவர்களுக்கும் ஒரு தேசியப்பட்டியல் கிடைத்திருக்கிறது. நிச்சயமாக நாம் ஒன்றுபட்டு 81000 வாக்குகள் பெற்றிருந்தால், எமக்கும் ஒரு தேசியப்பட்டியல் கிடைத்திருக்கும்.

அனைவரையும் எவ்வாறு ஒன்று சேர்ப்பதென்று யோசிக்கலாம். 2020 எமது கண்ணுக்குமுன் சாட்சியாக நிற்கிறது. புத்தள மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு 30 வருடத்தின் பின் தமக்குரிய பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தை அனைத்துக்கட்சியினரையும் ஒரே சின்னத்தில் போட்டியிட வைத்து தமக்குரிய பிரதிநிதித்துவத்தைப் பெற்றிருக்கின்றனர்.

மட்டக்களப்பு வாழ் முஸ்லிம் சமூகமே, அரசியல் தலைவர்களே ஒன்றுபட்டு ஒரே குடையின்கீழ் பயணியுங்கள். இன்சா அல்லாஹ் எதிர்வரும் காலங்கள் எமது சந்ததியினருக்கு வளமானதாக அமையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here