ஏறாவூர் பிரதேசத்திற்கான புதிய கல்விப் பணிப்பாளர் கடமையேற்கும் நிகழ்வு

0
54

(ஏறாவூர் நிருபர் எம்.ஜி.ஏ. நாஸர்)

மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஏறாவூர் பிரதேசத்திற்கான புதிய கல்விப் பணிப்பாளராக எம்.எம். மௌஜுத் கடமையேற்கும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு இன்று நடைபெற்றது.

வலயக்கல்விப்பணிப்பாளர் டாக்டர் உமர் மௌலானா முன்னிலையில் இவர் பணியினை ஏற்றுக்கொண்டார்.
பிரதிக்கல்விப்பணிப்பாளர் றிப்கா இம்தியாஸ் , சமாதானக்கல்வி , சமூக நல்லிணக்க இணைப்பாளர் எம்ஜிஏ நாஸர் மற்றும் பாடசாலை அதிபர்கள் பலரும் இந்நிகழ்வின்போது பிரசன்னமாயிருந்தனர்.

ஏறாவூர் பிரதேசத்திற்கான கல்விப் பணிப்பாளர் சேகுதாவூத் றஸ்ஸாக் ஓய்வுபெற்றதையடுத்து உதவிக்கல்விப்பணிப்பாளர்களான செய்யித் அஹமட் பின்னர் எம்எச்எம். நஸீர் ஆகியோர் பதில் பணிப்பாளர்களாக கடமையாற்றினர்.

இந்நிலையில் மாகாண கல்வித்திணைக்களத்தினால் நடாத்தப்பட்ட நேர்முகப்பரீட்சையில் பிரதேச கல்விப்பணிப்பாளர் மௌஜுத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார்.

எம்எம். மௌஜுத் கலைமாணி, கல்வி முதுமாணி, பட்டபின் கல்வி டிப்ளோமா மற்றும் முகாமைத்துவ டிப்ளோமா ஆகிய தரத்தினை உடையவராவார். ஏறாவூர்ப் பிரதேசத்தில் 18 பாடசாலைகள் இயங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here