மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று முதல் பி.சி.ஆர் பரிசோதனை

0
235

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று (28) முதல் பி.சி.ஆர் பரிசோதனை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

கொவிட்-19 எதிர்பாராவ பரவலை கட்டுப்படுத்தும் தேசிய செயற்பாட்டு மையத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மேலும், நாளொன்றுக்கு தற்போது 1,000 இற்கும் அதிகமான PCT பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், நேற்றுமுன்தினம் (26) 1,075 சோதனைகள் இவ்வாறு மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன் நேற்றையதினம் (27) சுமார் 1400 கொவிட்-19 சோதனை தொடர்பான பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.

நேற்றுமுன்தினம் (26) கொழும்பின் நாரஹேன்பிட்டியில் உள்ள தாபரே மாவத்தையில் இருந்து கொரோனா தொற்றிய இருவர் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அப்பகுதியிலிருந்து 100 இற்கும் மேற்பட்டோருக்கும் PCR சோதனை மேற்கொள்ளப்பட்டதாக, அனில் ஜாசிங்க தெரிவித்தார்.

சுகாதார அமைச்சின் மேற்பார்வையின் கீழ் கொழும்பு, களனி, பேராதெனிய பல்கலைக்கழகங்களில் காணப்படும் PCR இயந்திரங்களைப் பயன்படுத்தி சோதனைகளை நடாத்த நேற்று (27) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாகவும், இதன் மூலம் 1,200 பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்ள முடியும் என, அனில் ஜசிங்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், ஆசிய அபிவிருத்தி வங்கியால் (ADB) நிர்மாணிக்கப்பட்டு வரும் முல்லேரியாவாவில் உள்ள புதிய ஆய்வகத்தை குறுகிய காலத்திற்குள் கட்டி முடித்து, ஒரு நாளைக்கு சுமார் 1,000 சோதனைகளை அதன் மூலம் மேற்கொள்ளலாம் என்றும் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

இச்சந்தர்ப்பத்தில் பல்வேறு சிரமங்கள் இருந்தபோதிலும் இந்த பரிசோதனை உபகரணங்களை கொள்வனவு செய்வது தொடர்பில் சுகாதார அமைச்சகம் செயல்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here