பொலன்னறுவ, லங்காபுர பகுதியில் மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகள் இன்று

0
73

பொலன்னறுவ, லங்காபுர பகுதியில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளவர்களின் பி.சீ.ஆர் பரிசோதனை முடிவுகள் இன்று (31) வெளியிடப்படவுள்ளது.
குறித்த பகுதியில் 325 பேர் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

லங்காபுர பிரதேச செயலாளர் அலுவலக ஊழியர் ஒருவர் நேற்று (10) கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளமை இனங்காணப்பட்டார்.

இதற்கு முன்னர் கந்தகாடு புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் கொரோனா தொற்றுக்கு உள்ளான நபர் ஒருவரின் குடும்ப உறுப்பினர்களான இருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி இருந்தனர்.

இவ்வாறு கொரோனா தொற்றுக்கு உள்ளானர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த ஒருவரே நேற்று கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here