பொதுப்போக்குவரத்துக்களில் கிருமிநீக்கம் செய்யும் நடவடிக்கை!

0
38

பொதுப்போக்குவரத்துக்களில் கிருமிநீக்கம் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன.

நேற்று முதல் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜனாதிபதியின் தலைமையில் 13.03.2020 இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்பாட்டில் படையினர் தமது ஒத்துழைப்பை வழங்குவர். இந்தநிலையில் பொதுமக்கள் ஒன்று கூடுதல் மற்றும் நிகழ்வுகளை முடியுமானளவு தவிர்ப்பது என்ற முடிவும் நேற்று எடுக்கப்பட்டது.

சீனாவில் தற்போது கொரோனவைரஸ் தொற்று சமூக பழக்கவழக்களின் மூலம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.

எனவே அதிகாரிகள் சீனாவின் இந்த ஏற்பாடுகளை அறிந்துக்கொள்வது அவசியம் என ஜனாதிபதி கோட்டாபய இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here