பிரபல இந்தி நடிகர் இர்ஃபான் கான் காலமானார்.

0
154

பிரபல இந்தி நடிகர் இர்ஃ பான் கான். இவர், ‘ஜுராசிக் வேர்ல்ட்’, ‘தி ஜங்கிள் புக்’, ‘தி அமேஸிங் ஸ்பைடர்மேன்’, ‘லைஃப் ஆஃப் பை’, ’ஸ்லம்டாக் மில்லியனர்’ ஆகிய ஹாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். இவர் நியூரோ எண்டாக்ரின் டியூமர் (neuroendocrine tumour) எனப்படும் அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இரண்டு வருடங்களாக இவர் வெளிநாடுகளிலும் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று பெருங்குடல் தொற்று காரணமாக மும்பையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் இன்று உயிரிழந்தார். இர்ஃபான் கான் மறைவுக்கு சினிமா ரசிகர்களும், சினிமா பிரபலங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here