பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு விஷேட திட்டம்

0
28

அனைத்து பாடசாலைகளுக்கும் உடல் வெப்பமானி மற்றும் முகக்கவசங்களை பெற்றுக்கொடுக்க கல்வி அமைச்சு திட்டமிட்டுள்ளது. மாணவர்களின் எண்ணிக்கைக்கு அமைய, கால்களால் இயக்கக்கூடிய கைகழுவும் இயந்திரங்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.

இந்த செயற்பாடுகளுக்காக 630 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பாடசாலை கல்வி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர், இந்த உபகரணங்கள் பெற்றுக்கொடுக்கப்படும் என கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.

மாணவர்களின் சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here