நேற்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி சூப்பர் ஓவர் மூலம் வெற்றி பெற்றுள்ளது

0
56

துபாயில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு துவக்க சரியாக அமையாவிட்டாலும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களான ஸ்ரேயஸ் ஐயர் ஸ்ரேயஸ் ஐயர் 39 ரன்களும், ரிஷப் பண்ட் 31 ரன்களும், கடைசி நேரத்தில் ரூத்ரதாண்டவம் ஆடிய ஸ்டோனிஸ் 21 பந்துகளில் 53 ரன்களும் எடுத்து கைகொடுத்ததன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 157 ரன்கள் எடுத்தது.

பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், ஷெல்டன் கார்டல் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

இதன்பின் 158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எட்டக்கூடிய இலக்கை துரத்தி களமிறங்கிய பஞ்சாப் அணிக்கு மற்ற அனைத்து வீரர்களும் ஏமாற்றம் கொடுத்தாலும், இளம் வீரரான மாயன்க் அகர்வால் தனி ஒருவனாக போராடி பஞ்சாப் அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார்.

போட்டியின் கடைசி ஓவரின் ஐந்தாவது பந்தில் மாயன்க் அகர்வால் 89 ரன்கள் எடுத்திருந்த போது விக்கெட்டை இழந்தார், மாயன்க் அகர்வால் விக்கெட்டை இழக்கும் போது போட்டி டிராவில் இருந்தது கடைசி பந்தில் வெறும் ஒரு ரன் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் களத்தில் இருந்த கிரிஸ் ஜோர்டன் சம்பந்தமே இல்லாத ஷாட் அடித்து கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்ததன் மூலம் போட்டி டிராவில் முடிந்தது.

இதனையடுத்து வீசப்பட்ட சூப்பர் ஓவரில் முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி வெறும் 2 ரன்களுக்கே கொடுக்கப்பட்ட இரண்டு விக்கெட்டுகளையும் இழந்தது அசிங்கப்பட்டது. இதன் பின் சூப்பர் ஓவரில் மூன்று ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி அசால்டாக வெற்றியடைந்து தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here