நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது பங்களாதேஷ்!

0
45

19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கிண்ண ஒருநாள் தொடரின் 2 வது அரையிறுதி ஆட்டத்தில் 219 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி மஹமதுல் ஹாசன் ஜோய் சதத்தின் மூலம் நியூசிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றுள்ளது.

219 என்ற எளிதான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடத் தொடங்கிய பங்களாதேஷ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. பங்களாதேஷ் அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய தன்ஷிட் ஹசன் 3 ஓட்டங்களுடனும் ஹ{சைன் எமோன் 14 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து வெளியேறிய இக்கட்டான நிலையில் மூன்றாவது வீரராக களமிறங்கிய மஹமதுல் ஹாசன் ஜோய் பொறுப்புடன் ஆடி சதமடித்ததுடன் அணியையும் வெற்றிப்பாதைக்கு இட்டுச்சென்றுள்ளார்.

44.1 ஓவர்களில் நான்கு விக்கெட்டுக்களi மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை எட்டியுள்ள பங்களாதேஷ் அணி வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்திய அணியை எதிர்கொள்ள உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்று பங்காதேஷ் அணி களத்தடுப்பை தெரிவுசெய்திருந்த நிலையில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 218 ஓட்டங்களை பெற்றிருந்தது.

பங்களாதேஷ் அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொண்டு ஓட்டங்களை எடுக்க முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் திணறிய நிலையில் வீலர் கிரீனல் மட்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 75 ஓட்டங்களை பெற்று இறுதிவரை ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்துவீச்சில் இஸ்லாம் 10 ஓவர்கள் பந்துவீசி 45 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுக்களையும், ஹ{சைன் மற்றும் முரட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் அதிகபட்சமாக கைப்பற்றியிருந்தார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here