நாட்டில் பாடசாலைகள் திறக்கப்படுவதில் புதிய நடவடிக்கை…

0
111

நாட்டில் பாடசாலைகளை இரண்டு கட்டங்களாக திறக்க யோசனை முன்வைக்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுக்காரணமாக பாடசாலைகள் அனைத்தும் தொடர்ந்தும் மூடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தரம் 10 முதல் 13 வரையிலான வகுப்புகளை முதற்கட்டமாக திறக்க யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக
தெரிவிக்கப்படுகின்றது. தேசிய மட்டத்தில் நடைபெறும் பரிட்சைகளை கவனத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இதேவேளை, பாடசாலைகள் அனைத்தும் மீண்டும் திறக்கபடும் நிலையில், கிருமி நீக்கம் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் குறிப்பிடப்படுகின்றது. மேலும் பாடசாலைகள் திறக்கப்படும் திகதி குறித்தும் உறுதியான முடிவுகள் அறிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here