த.தே.கூட்டமைப்பின் முன்னாள் அமைச்சர் விக்னேஸ்வரன் அணியில் இணைந்து போட்டி!

0
60

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ரெலோ கட்சி ஊடாக கடந்த மாகாணசபைத் தேர்தலில் போட்டியிட்டு வடக்கு மாகாணசபையின் இறுதிக்காலத்தில் சுகாதார அமைச்சராக பணியாற்றியிருந்த வைத்திய கலாநிதி ஞானசீலன் குணசீலன் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியில் போட்டியிடவுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த வடக்கு மாகாணசபை அமைச்சர்கள் மீது ஊழல் மோசடி குற்றச்சாட்டின் பின்னர் அவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்ட நிலையில் முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனினால் புதிய வடமாகாண அமைச்சர்கள் நியமிக்கப்பட்டனர்.

இதன் போது வட மாகாண சுகாதார அமைச்சராக இருந்த தமிழரசுக் கட்சியை சார்ந்த வைத்திய கலாநிதி பா.சத்தியலிங்கம் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரெலோ கட்சியை சேர்ந்த வைத்திய கலா நிதி ஜீ.குணசீலன் முதலமைச்சரினால் நியமிக்கப்பட்டார்.

எனினும் குறித்த அமைச்சு பதவியை பெற்றுக்கொள்ள வேண்டாம் என ரெலோ கட்சியின் தலைமைப்பீடம் குணசீலனிடம் அழுத்தங்களை பிரையோகித்தது.

எனினும் பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடக்கு சுகாதார அமைச்சராக பதவியேற்று கடமையாற்றி வந்தார்.

இந்த நிலையில் ஆசனம் வழக்கிய ரெலோ கட்சிக்கும், அவருக்கும் இடையிலான தொடர்புகள் துண்டிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இவ்வருடம் இடம் பெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான ‘தமிழ் மக்கள் தேசிய கூட்டணி’ சார்பாக மன்னார் மாவட்டத்தில் முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் ஜீ.குணசீலன் நியமிக்கப்பட்ட நிலையில் அவர் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here