டிரம்பின் பிரசார குழு அதிகாரிக்கு கொரோனா தொற்று

0
133

அங்கு நேற்று மதியம் நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 29 லட்சத்தை நெருங்கி வருகிறது. பலி எண்ணிக்கை ஒரு லட்சத்து 32 ஆயிரத்தை கடந்துள்ளது.

இதனிடையே அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு மத்தியிலும் திட்டமிட்டபடியே ஜனாதிபதி தேர்தலை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி வருகிற நவம்பர் மாதம் அங்கு ஜனாதிபதி தேர்தல் நடக்கிறது.

இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடும் நிலையில் ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை ஜனாதிபதி ஜோ பிடன் களம் இறங்கி இருக்கிறார்.

கொரோனா பாதிப்பு ஒருபுறம் இருக்க தேர்தலுக்கான பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த நிலையில் ஜனாதிபதி டிரம்பின் பிரசார குழுவில் முக்கிய பங்காற்றி வரும் கிம்பெர்லி கில்போயில் என்ற அதிகாரிக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர் நேற்று முன்தினம் தேர்தல் பிரசாரத்துக்காக ஜனாதிபதி டிரம்புடன் தெற்கு டகோட்டா மாகாணத்துக்கு சென்று வந்த நிலையில் அவருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் ஜனாதிபதி டிரம்புக்கும் வைரஸ் தொற்று பரவியிருக்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here