சீர்மை வள இடப்படுத்தி (URL)

0
432

பொதுவாக இணையத்தின் சேவைகள் அனைத்தையும் அணுகுவதற்கு ஒரு பாதை மற்றும் இடம் காணப்படவேண்டும். அந்தப் பாதை மற்றும் வளம் காணப்படும் இடத்தின் அமைவிடத்தைக் குறித்து நிற்பதே இந்த சீர்மை வள இடப்படுத்தி என்ற பதமாகும். சீர்மை வள இடப்படுத்தியினை , சீரான வள இடங்காட்டி, முழுமையான இணையத்தள முகவரி போன்ற பதங்களாலும் அழைக்கின்றனர். இணையத்தில் உள்ள வலைப்பக்கம் அல்லது கோப்பு ஒன்றின் முகவரியே சீர்மை வள இடப்படுத்தி  (URL)  எனச் சுருக்கமாக வரைவிலக்கணப்படுத்தப்படுகின்றது.

சீர்மை வள இடப்படுத்தி ஒன்றில் முன்ஒட்டு(Prefix)  மற்றும் சேவை வகை (Service type), சேவையக பெயர் அல்லது ஆள்கள முகவரி (Server name or IP address), வளம் அமைந்துள்ள இடம் (path) மற்றும் கோப்பின்; பெயர் (File name)) என்பன காணப்படும். குறிப்பாக பின்வரும் சீர்மை வள இடப்படுத்தி((URL)) ஒன்றை அவதானிப்பதனூடாக அவற்றின் கூறுகளை அறிந்துகொள்ள முடியும்.

http://www.marimuththan.com/downloads/hydrology.pdf

•             முன் ஒட்டு மற்றும் சேவை வகை :- :- http:// www (வலைத்தள முகவரியில் முன்ஒட்டு http எனவும், சேவை வகையாக www (உலகளாவிய வலை) உம் காணப்படும். இதேவேளை பொதுவாக முன்னொட்டுக்களே சேவை வகைளை குறிப்பனவாகும் காணப்படுகின்றன.)

•             சேவையகப் பெயர் அல்லது ஆள்கள முகவரி :- marimuththan.com

•             மேல்மட்ட ஆட்களப் பெயர் :- .com

•             கோப்பினுடைய அமைவிடம் :- downloads

•             கோப்பின் பெயர் :- hydrology.pdf

அனைத்து வலைத்தள சீர்மை வள இடப்படுத்திகளும் (URL) பெரும்பாலும் http என்ற முன்னொட்டுடனேயெ ஆரம்பிக்கின்றன. சில பாதுகாப்பான இணையத்தளங்களின் முன்னொட்டுக்கள் மாத்திரம் https என ஆரம்பிக்கின்றன. இதேவேளை வேறு இணைய சேவைகள் குறிப்பாக கோப்பு பரிமாற்ற சேவையின் முன்னொட்டானது ftp எனவும், மின்னஞ்சல் சேவையின் முன்னொட்டானது mailto எனவும் காணப்படும்.

உதாரணமாக சில முழுமையான இணையத்தள முகவரிகள் ((URL))

•             இலங்கை கல்வி அமைச்சு – http://www.moe.gov.lk

•             இலஙகைப் பரீட்சைத் திணைக்களம் –  http://www.doenets.lk

•             தேசிய கல்வி நிறுவகம் http://www.nie.lk

•             கல்வி வெளியீட்டுத் திணைக்களம்http://www.edupub.gov.lk

•             இ-தக்சலாவ கல்வித்தளம் –– http://www.e-thakshalawa.gov.lk

தொகுப்பு:- ச.அக்‌ஷயன், ஆசிரியர், இ/தேலை தமிழ் மகா வித்தியாலயம்.

# http://www.e-thaksalawa.moe.gov.lk

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here