கொரோனோவை எதிர்த்து ஒரு வருடகாலம் போராட வேண்டும்

0
143

உலகளாவிய தொற்றுநோயாக மாறியுள்ள கொவிட் 19 வைரஸை கட்டுப்படுத்த உலகெங்கிலும் உள்ள மக்கள் சுமார் ஒரு வருடம் போராட வேண்டியிருக்கும் என்று வைரஸ் நோய்கள் குறித்த உலகின் சிறந்த மருத்துவ விஞ்ஞானிகளில் ஒருவரான பேராசிரியர் மலிக் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் பிறந்து ஹொங்கொங் மருத்துவக் கல்லூரியின் பேராசிரியரான மலிக் பீரிஸ், கொவிட் 19 வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மருந்து அல்லது தடுப்பூசி எதுவும் இதுவரையில் உருவாக்கப்படாமையே காரணமென தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸை ஓரளவிற்கு கட்டுப்படுத்த தனிமைப்படுத்தப்பட்ட நடவடிக்கைகள் சிறந்த வழி என்றும் அவர் கூறினார்.

பேராசிரியர் மலிக் பீரிஸ் SARS என்ற ஒரு வகை வைரஸைக் கண்டுபிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here