கொரோனா வைரஸ் அதிகமாக உயிர்வாழக்கூடிய சந்தர்ப்பங்கள் பற்றிய ஆய்வின் முடிவு

0
55

சீனாவின் வுஹான், பெய்ஜிங் மற்றும் டேலியன் ஆகிய பிராந்தியங்களில் அண்மையில் ஏற்பட்ட கொரோனா நோய்த்தொற்றுகளில் சில ஒற்றுமை இருப்பதாக சீனாவின் உயர்மட்ட தொற்றுநோயியல் நிபுணர் தெரிவித்துள்ளார்.

அவை தற்செயலாக ஏற்படவில்லை, ஏனெனில் அவை அனைத்தும் கடல் உணவு சந்தைகளின் குளிர்ந்த அசுத்தமான சூழலில் நிகழ்ந்தன, மேலும் வைரஸ் ஏரோசோல்கள் மூலம் மக்களை பாதித்திருக்கக்கூடும் என தொற்றுநோயியல் நிபுணர் குறிப்பிட்டுள்ளார்.

நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான சீன மையத்தின் முதன்மை தொற்றுநோயியல் நிபுணர் வு ஜுன்யோ கூறியதாவது, கொரோனா வைரஸ் சாகாமலிருக்க ஈரப்பதமான மற்றும் குறைந்த வெப்பநிலை சூழல் மிகவும் உகந்ததாக உள்ளது என்றார்.

அத்ததைய சூழலில் மாசு இருக்கும் வரை வைரஸ் வலுவாகும் மற்றும் அதை அழிப்பது எளிதானது அல்ல, இதன் விளைவாக வைரஸ் பரவுகிறது என வு கூறினார்.

பெய்ஜிங்கின் ஜின்ஃபாடி சந்தையில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், சூழல் மாசுபட்டால், வைரஸ் ஏரோசோல்கள் மூலம் மக்களை பாதிக்கக்கூடும் என்பதைக் காட்டியது.

தொழிலாளர்கள் வைரஸால் பாதிக்கப்பட்ட பின்னர் சுற்றுச்சூழலை மாசுபடுத்தி மற்றவர்களுக்கு பரப்புகிறார்கள்.

ஈரப்பதமான சூழலில் கொரோனா வைரஸ் இருப்பதைத் தடுக்க, கடல் உணவு சந்தைகள் போன்ற இடங்கள் போதுமான காற்றோட்டம் பெற வேண்டும் என்று வு பரிந்துரைத்தார், இது தொற்றுநோயைக் குறைக்க உதவும் என குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here