கொரோனாவிலிருந்து மீண்ட 113 வயது மூதாட்டி

0
74

மரியா பிரன்யாஸ் என்ற மூதாட்டி 1907 ஆம் ஆண்டு அமெரிக்காவில் பிறந்தார். அங்குச் சிறிது காலம் வாழ்ந்த அவர் அதன் பின்னர் ஸ்பெயினுக்குக் குடியேறினார். அவருக்கு மூன்று மகள்கள் உள்ளனர்.இவருக்குக் கடந்த ஏப்ரல் மாதம் கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவரது வீட்டிலேயே மரியா தனிமைப்படுத்தப்பட்டார்.

வீட்டிலிருந்தே அவருக்குக் கொடுக்கப்பட்ட தொடர் சிகிச்சையால் தற்போது கொரோனா தொற்றிலிருந்து மீண்டுள்ளார். இந்தத் தள்ளாத வயதில் தைரியமாக நோய்த் தொற்றை எதிர்த்து அவர் மீண்டிருப்பது பலருக்கும் முன்னுதாரணமாக மாறியுள்ளது. ஸ்பெயினில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டவர் மரியா, நாட்டிலேயே மிக மூத்த வயது நோயாளி என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here