கூகுள் குரோம் பயனர்களுக்கு வெளியிடப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை

0
83

இன்றைய காலத்தில் அதிகளவானவர்களால் பயன்படுத்தப்பட்டுவரும் இணைய உலாவியாக கூகுள் குரோம் காணப்படுகின்றது.

இதனை கணினிகளில் மாத்திரமன்றி மொபைல் சாதனங்களிலும் பயனர்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் குறித்த உலாவியினை உடனடியாக அப்டேட் செய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த அவசர வேண்டுகோளை Indian Computer Emergency Response Team (CERT-In) விடுத்துள்ளது.

தொலை அணுகல் முறையில் பயனர்களின் சாதனங்களை ஹேக்கர்கள் கையாளக்கூடிய அபாயம் காணப்படுவதனால் இந்த அவசர வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இதன்படி கூகுள் குரோமின் புதிய பதிப்பான 84.0.4147.89 இனை அப்டேட் செய்யுமாறு கோரப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here