கிரிக்கெட் வீரர் உமர் அக்மலுக்கு 3 வருடத் தடை

0
73

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் உமர் அக்மல் அனைத்து வகையான கிரிக்கெட்டிலிருந்தும் 3 வருடங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் சுப்பர் லீக் போட்டிகளின் 5 ஆம் அத்தியாயம் ஆரம்பமாகுவதற்கு முன், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுவதற்காக தான் அணுகப்பட்டமை குறித்து அதிகாரிகளிடம் முறையிடாமையே இதற்கான காரணமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஒழுக்காற்றுக் குழுவின் தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி பஸால் ஈ மீரான் சௌஹான் இத்தீர்மானத்தை மேற்கொண்டார் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபை இன்று திங்கட்கிழமை அறிவித்துள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் ஊழல் ஒழிப்பு மற்றும் பாதுகாப்புப் பணிப்பாளர் லெப். கேணல் ஆசிப் மஹ்மூத் இது தொடர்பாக கூறுகையில், வெற்றிகரமானவராக விளங்கக்கூடிய சர்வதேச கிரக்கெட்ச வீரர் ஊழல் குற்றச்சாட்டு காரணமாக 3 வருடங்களுக்குத் தடை செய்யப்படுவதில் பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மகிழ்ச்சி எதையும் அடையவில்லை. ஆனால், ஊழல் ஒழிப்பு விதிகளை மீறிவிட்டு தப்பிவிடலாம் என எண்ணும் அனைவருக்கும் இது மீண்டும் ஒரு நினைவுபடுத்தலாக அமைகிறது’ எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த பெப்ரவரி 20 ஆம் திகதி உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பாகிஸ்தான் கிரிகெட் சபையினால் உமர் அக்மல் (29) இடைநிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here