கிண்ணியாவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி புறப்பட்டுச் சென்ற வாகனம் விபத்து

0
67

இன்று அதிகாலை 05:30 am மணியளவில் கிண்ணியாவிலிருந்து அக்கரைப்பற்று நோக்கி புறப்பட்டுச் சென்ற வாகனம் மூதுார் இறால்குழிப்பாலத்திற்கு (உப்புக்காச்சி மடு) முன்னால் மாடு ஒன்று குறுக்கிட்டதன் காரணமாக விபத்துக்குள்ளானது.

இதில் பயணித்த மத்ரிஸா மாணவிகளில் மூவர் சிறுகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்டு மூதுார் தளவைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வாகன சாரதியும் சிறுகாயங்களுக்கு உள்ளாக்கப்பட்டு மூதுார் தளவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் மேலதிக விசாரணைகளை மூதுார் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Image may contain: tree, sky, motorcycle, plant, outdoor and nature
Image may contain: tree, car and outdoor
Image may contain: car, tree and outdoor

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here