கர்ப்பம் தரித்த தாயிலிருந்து குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்படுமா?

0
45

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்

கர்ப்பம் தரித்த தாய் மூலம் குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை
என சீன வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து ‘பிராண்டியர்ஸ் இன் பீடியாஸ்ட்ரிக்ஸ்’ ( Frontiers in Pediatrics) என்ற மருத்துவ இதழில் கூறப்பட்டுள்ளதாவது:-

கர்ப்பமான தாயிடமிருந்து பிறந்த குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட வாய்ப்பில்லை. இதுதொடரபாக கொரோனா தொற்று ஏற்பட்ட கர்ப்பம் தரித்த 4 பெண்களுக்கு பரிசோதனை செய்தோம். நடத்தப்பட்ட சோதனையில் அவர்களுக்கு மட்டுமே கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. அவர்களது வயிற்றிலிருந்த குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை. குழந்தைகள் பிறந்த பிறகு அந்த குழந்தைகள் வைத்தியரின் கண்காணிப்பில் வைக்கப்பட்டு சோதித்து பார்த்தோம்.

அப்போது அந்த குழந்தைகளுக்கு கொரோனா தொற்று ஏற்படவில்லை என்பதை உறுதி செய்துள்ளோம். பிறந்த குழந்தைகளுக்கு சிறியளவில் சுவாசப் பிரச்சினை இருந்தது. எனினும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here