கத்தாரிலுள்ள பணப்பரிமாற்ற நிலையங்களை இன்று முதல் மூட உத்தரவு!

0
58

கத்தாரிலுள்ள பணப்பரிமாற்ற நிலையங்களை (Money exchanges)
இன்று (26.03.2020) முதல் மறு அறிவித்தல் வரை மூட கத்தார் அரச தொடர்பாடல் அலுவலகத்தினால் உத்தரவிடப்பட்டுள்ளது.

கத்தாரில் கொரோனா வைரஸ் COVID-19 பரவுவதைத் தாடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மனிதர்கள் நேரடித் தொடர்பை குறைப்பதனால் கத்தாரில் COVID-19 பரவுவதை தடுக்க முடியும். எனவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பணப்பரிமாற்ற நிலையங்கள் மூடப்பட்டடிருக்கும் காலத்தில் பணங்களை பணப்பரிமாற்ற நிலையங்களின் ஆன்லைன் சேவை ஊடாகவும், மொபைல் அப்ளிகேசன்கள் ஊடாகவும், ஓரிடோ பணம் (Ooredoo Money) மூலமும் மாற்றிக்கொள்ள முடியும் என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையானது கத்தார் வாழ் வெளிநாட்டு பணியாளர்களைப் பாதிக்கும் செயற்பாடாகும். என்றாலும் கொரோனா வைரஸ் விவகாரத்தில் அனைவரும் அரசாங்கத்துக்கு ஒத்துழைக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

#Qatartamil

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here