கடனட்டை மோசடியில் ஈடுபடும் இணையத்தளங்கள் தொடர்பில் தகவல்

0
62

இணையத்தளத்தினூடாக வீடுகளுக்கு பொருட்களை விநியோகிப்பதாகத் தெரிவித்து, கடனட்டைகளில் இருந்து தரவுகளை திருடியமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்வாறான மோசடிகளில் ஈடுபடும் போலி இணையத்தளங்கள் தொடர்பில் முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசர நடவடிக்கைப் பிரிவின் தகவல் தொடர்பாடல் பிரிவு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல தெரிவித்துள்ளார்.

அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாத அவ்வாறான இணையத்தளங்களில் இருந்து பொருட்கொள்வனவில் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறு அவர் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளார்.

இணையத்தளத்தினூடாக பொருட்களை விநியோகிப்பதாக தெரிவித்து நிதி மோசடியில் ஈடுபட முயன்ற சில போலி இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here