கடந்த 24 மணிநேரத்தில் ஸ்பெயின் நாட்டில் 665 பேர் உயிரிழப்பு

0
34

ஸ்பெயினில் இப்போதைய நிலவரப்படி இன்று -26- கொரோனா வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 665ஆக உள்ளது.

இதனால் இதுவரை ஸ்பெயினில் கோவிட்-19 தொற்றால் இறந்துள்ளவர்களின் எண்ணிக்கை 4,089 ஆகியுள்ளது.

இது புதன்கிழமை உயிரிழந்தோரைவிட குறைவானது. புதனன்று உயிரிழந்தோர் 738. கொரோனாவால் தாக்கப்பட்டவர் என உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 56,188.

தலைநகர் மேட்ரிட் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. ஆனால் கேட்டலோனியாவில் 11,592 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாத் தொற்று பரவுவதை தவிர்க்க நேற்று இரவு முதல் ஏப்ரல் 12 வரை ஸ்பெயின் நாடு முழுவதும் அவசர நிலையை அறிவித்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here