ஓட்டுநர் உரிமம் அற்ற “மினி மின்சார கார்”

0
52

பார்ப்பதற்கு சிறிய அளவிற்கு இருக்கும் இது குழந்தைகள் விளையாடும் பொம்மை மகிழுந்து அல்ல.

மனிதர்கள் பயணிக்கும் நிஜ மகிழுந்து.

இந்த மகிழுந்தை இயக்க எரிபொருளோ, ஓட்டுநர் உரிமமோ தேவையில்லை.

ஏனெனில் இது முற்றிலும் மின்சாரத்தில் இயங்குகிறது.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த citroën நிறுவனம் தயாரித்துள்ள இந்த மகிழுந்திற்கு அமி என பெயரிட்டுள்ளது.

சுமார் 6000€ பெறுமதியான இந்த மகிழுந்து 2041 மில்லி மீற்றர் நீளம் கொண்டதாக இரண்டு இருக்கைகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஆகவே ஓட்டுநருடன் இணைந்து ஒருவர் மட்டுமே இந்த மகிழுந்தில் பயணிக்க முடியும்.

இதில் உள்ள 5.5 கிலோ வாட் லித்தியம் அயன் மின்கலத்தை முழுமையாக மின்னேற்றம் செய்ய 3 மணி நேரமாகும்.

மின்கலத்தை ஒரு முறை மின்னேற்றம் செய்தால் 70 கிமீ தூரம் வரை செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த மகிழுந்தில் Bluetooth, Onboard charging Cable உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.

உருவத்தில் சிறிதாக இருந்தாலும் அமி மணிக்கு 45 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும்.

இந்த மினி மின்சார மகிழுந்தை குறுகிய சாலைகளிலும், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும் எளிதாக இயக்கலாம்.

மேலும் அமி மகிழுந்திற்கு தரிப்பிட பிரச்சனையும் இல்லை.

நகரவாசிகளை கருத்தில் கொண்டே இந்த மகிழுந்து வடிவமைக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ள citroën நிறுவனம், அமி மகிழுந்திற்கான முன்பதிவு மார்ச் 30 ஆம் திகதி முதல் பிரான்சிலும், சில மாதங்களுக்கு பிறகு ஸ்பெயின், இத்தாலி, போர்ச்சுக்கல், பெல்ஜியம், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளிலும் தொடங்க உள்ளது.

இதன் விலை இந்திய மதிப்பில் 4 லட்சத்து 76 ஆயிரம் ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

citroën நிறுவனம், விரைவில் இந்தியாவில் தனது முதல் மகிழுந்து காட்சியறையை ஆமதாபாத்தில் நிறுவ உள்ளது.

எனவே, அமி மகிழுந்து விரைவில் இந்தியாவிலும் களமிளங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here