எதிர்வரும் நாட்கள் தீர்மானமிக்கது; நாட்டு மக்களிடம் வேண்டுகோள்

0
90

எதிர்வரும் நாட்கள் தீர்மானமிக்கது என்பதால் சன நெரிசலான பகுதிகளை தவிர்த்து செயற்படுமாறு பொது மக்களிடம் கேட்டுக்கொள்வதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதுவரையில் கொரோனா பரவல் தொடர்பில் ஆராய்ந்து தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலையினை மக்கள் உணர்ந்து செயற்பட வேண்டும்.

தனிமைப்படுத்தலுக்கு அனுப்பப்படும் நபர்கள் தங்கள் பொறுப்பினை கருத்திற்கொள்ளவில்லை என்றால் கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் சிக்கல் நிலை ஏற்படும்.

தற்போது நாடு முழுவதும் கொரோனா நோயாளிகள் அடையாளம் காணப்படுவதனை கருத்திற் கொண்டு PCR பரிசோதனைகளை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனாவின் இரண்டாவது அலைக்கு, அண்மையில் நடந்த திருமண நிகழ்வுகளே காரணமாகும்.

இதனை கருத்திற் கொண்டு மக்கள் கூடும் நிகழ்வுகள், விருந்துகள் போன்றவற்றை ஏற்பாடு செய்ய வேண்டாம். அப்படி ஏற்பாடு செய்திருந்தால் முடிந்தளவு அங்கு செல்வதனை தவிர்க்க வேண்டும் என இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here