உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் தொடர்பில் வெளியான தகவல்

0
121

அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெற திட்டமிட்டிருந்த இருபதுக்கு இருபது உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் பிற்போடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பான விடயங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை சர்வதேச கிரிக்கட் சபை அதிகாரிகள் கூடும் போது உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுமென சர்வதேச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை ஐ.பி.எல் போட்டிகளை இந்த வருடத்தில் நடத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை நம்பிக்கை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா தீவிரமாக பரவி வருவதன் காரணமாக பலகோடி டொலர் பெறுமதியான லீக் போட்டிகளை இந்தியாவில் நடத்துவது கடினமென விமர்சனங்கள் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here