இலங்கை சட்டக்கல்லூரிக்கு அனுமதி பெறும் மாணவர்களில் அதிகமாக முஸ்லிம் மாணவர்கள்

0
69

இலங்கை சட்டக்கல்லூரிக்கு மாணவர்களை சேர்க்கும் போது, முஸ்லிம் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதை காண முடிந்துள்ளதாக தேசிய புலனாய்வு சேவையின் முன்னாள் பொறுப்பதிகாரி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் நிலந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்தி வரும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் நேற்று அவர் இதனை கூறியுள்ளார்.
2003 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை இலங்கை சட்டக் கல்லூரிக்கு முஸ்லிம் மாணவர்கள் சேர்க்கப்படும் விகிதம் அதிகரித்து காணப்பட்டது.

2003 ஆம் ஆண்டு இலங்கை சட்டக்கல்லூரியில் ஐந்து முஸ்லிம் மாணவர்கள் மாத்திரமே சேர்க்கப்பட்டிருந்தனர். எனினும் 2012 ஆம் ஆண்டு அந்த எண்ணிக்கை 78 ஆக அதிகரித்தது. இது 25.24 வீதம் எனவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு காரணம் என்ன என ஆணைக்குழுவின் விசாரணைகள் கேட்ட போது, அது நீதியமைச்சின் பிரச்சினை எனவும்,அதனை நாட்டின் பிரச்சினையாக மாற்றியதை காணக் கூடியதாக இருந்து எனவும் நிலந்த ஜயவர்தன குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here