இலங்கை அணி வீரர்களிடம் மிக விரைவில் விசாரணை

0
127

(ஜே.எப்.காமிலா பேகம்)

2011ஆம் ஆண்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஆட்டநிர்ணய விவகாரம் குறித்து உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் கலந்து கொண்ட இலங்கை அணி வீரர்களை விசாரணை செய்ய விளையாட்டுத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளது.

2019ஆம் ஆண்டு 24ஆம் இலக்க விளையாட்டுத்துறைத் திருத்த சட்டத்திற்கமைய அமைக்கப்பட்டுள்ள விளையாட்டுக் குற்றப்படுத்துப் பிரிவு இந்த விசாரணையை நடத்தவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை ஊடகமொன்றுக்கு அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, இலங்கையிலேயே அதிகளவான ஆட்டநிர்ணயத்தில் ஈடுபடுகின்றவர்கள் இருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here