இரு நூற்றாண்டுகளுக்கு முன் தென்னிலங்கை கடலில் மூழ்கிய கப்பலின் நங்கூரம் கண்டுபிடிப்பு..!!

0
396

1871ஆம் ஆண்டில் காலி கடற்பரப்பில் மூழ்கிய கப்பலின் நக்கூரமொன்றை அடையாளம் கண்டுள்ளதாக மத்திய கலாச்சார நிதியத்தின் கடல் தொல்பொருள் பிரிவு தெரிவித்துள்ளது. நங்கூரம் சேதமடைந்த நிலையில், காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காலி துறைமுகத்தில் 13 மூழ்கிய கப்பல்கள் உட்பட 26 தொல்பொருள் இடங்கள் உள்ளன என்று அந்த பிரிவின் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.காலி துறைமுகத்திலிருந்து 1871, நவம்பர் 1 அன்று அவுஸ்திரேலியாவின் சிட்னிக்கு பயணம் செய்தபோது இந்த கப்பல் விபத்திற்குள்ளானது. 1863 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட ரங்கூன் என்ற கப்பலே கடலில் மூழ்கியது.

காலி துறைமுகத்திலிருந்து இரண்டு மைல் தொலைவில் உள்ள பாறைக்கு அருகே கப்பல் மோதியதாக கடல் தொல்பொருள் பிரிவு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இது ஒரு அஞ்சல் கப்பலாக பயன்படுத்தப்பட்டது., கப்பல் மூழ்கும்போது, ​​அஞ்சல் பைகள் உட்பட பல பொருட்கள் இருந்தன.

பொதுவாக, சர்வதேச கடல் வரைபடங்கள் ஒரு கப்பல் எங்கு மூழ்கியது என்பதைக் குறிப்பிடப்படும். சமீபத்தில் ரங்கூனை அடையாளம் கண்டபோதும், இது இன்னும் சர்வதேச கடல் வரைபடங்களில் குறிப்பிடப்பிடப்படவில்லை.

அண்மையில் அந்த பகுதியில் நங்கூரமிட்ட கப்பலொன்று, ரங்கூனின் நங்கூரத்துடன் மோதி சேதமடைந்துள்ளது.விரைவில் அந்த பகுதி சர்வதேச கடல் வரைபடத்தில் குறிப்பிடப்படுமென தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here