இன்று 10 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர்

0
94

இலங்கையில் இன்று மாலை 3 மணி வரையான காலத்தில் 10 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் இலங்கை அடையாளம் காணப்பட்ட கொரோனா நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 2 ஆயிரத்து 763 ஆக அதிகரித்துள்ளது.

தனிமைப்படுத்தப்பட்டுள்ள கந்தகாடு புனர்வாழ்வு முகாமை சேர்ந்த 9 பேர் மற்றும் கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தங்கியிருந்த ஒருவருடன் சம்பந்தப்பட்ட மற்றுமொருவர் என 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உலகம் முழுவதும் இதுவரை ஒரு கோடியே 56 லட்சத்து 77 ஆயிரத்து 63 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் 6 லட்சத்து 36 ஆயிரத்து 969 பேர் உயிரிழந்துள்ளனர். 95 லட்சத்து 62 ஆயிரத்து 907 பேர் குணமடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here