இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் விபத்து!

0
353

இந்தியன் 02 படப்பிடிப்புத் தளத்தில் பாரம் தூக்கி (கிரேன்) உடைந்து வீழ்ந்த சம்பவத்தில் இயக்குநர் சங்கருக்கும் காலில் முறிவு ஏற்பட்டதாக தமிழகத்தின் சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பூந்தமல்லி அருகே நசரத்பேட்டையில் உள்ள தனியார் படப்பிடிப்புத் தளத்தில் நேற்று இரவு சண்டைக் காட்சிப் பதிவுக்கான தயார்ப்படுத்தல்கள் இடம்பெற்றபோது அங்கு அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டகை மீது பாரம் தூக்கி உடைந்து வீழ்ந்துள்ளது.

கொட்டகையின் உள்ளே நின்றுகொண்டிருந்த உதவி இயக்குனர் கிருஷ்ணா, ஆர்ட் அசிஸ்டென்ட் சந்திரன், புரொடக்‌ஷன் அசிஸ்டென்ட் மது ஆகிய மூவரும் உயிரிழந்த நிலையில்,

ஏனையவர்கள் பத்துப் பேர் படுகாயங்களுக்கு உள்ளான நிலையில் அருகில் உள்ள தனியார் சவீதா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இவர்களில் இயக்குநர் சங்கருக்கும் இடது காலில் முறிவு ஏற்பட்டிருப்பதாக தமிழக ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இருப்பினும் குறித்த சம்பவம் தொடர்பிலான உறுதியான தகவல்கள் வெளியாகவில்லை.

குறித்த விபத்துச் சம்பவம் தொடர்பில் லைக்கா நிறுவனமும் நடிகர் கமலும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here