அம்பர் எனப்படும் பெறுமதிமிக்க பொருள் பற்றிய தகவல்

0
111

#பர்ஹானா_பதுறுதீன்

” திமிங்கில எச்சம் ” ( மீனம்பர் – AMBERGRIS- அம்பர் கிரிஸ்)

இலங்கையின் மேற்கு கடற்பரப்பில் இந்த அதிசயப் பொருள் ஒன்று கடந்த வாரம் கிடைத்துள்ளது. விலை மதிக்க முடியாத இந்தப் பொருளினால் மீனவர்கள் சிலர் மிகப்பெரிய அதிஷ்டத்தை அடைந்திருக்கிறார்கள். ஒரு கிலோ அம்பர் பல கோடி ரூபா பெறுமதியானது எனச் சொல்லப்படுகிறது.

அம்பர் என்பது தமிழில் ஓர்க்கோலை, பொன்னம்பர், பூவம்பர், மீனம்பர், தீயின்வயிரம், செம்மீன் வயிரம், மலக்கனம், கற்பூரமணி என்னும் பல சொற்களால் குறிக்கப்படுகின்றது இங்கு நாம் நோக்குவது மீனம்பர் பற்றியதேயாகும்.

இது உற்பத்தியாகும் விதம் குறித்து, பலரும் பல விதமாக கூறுகிறார்கள், ஆனால் திமிங்கலம் உமிழும் வாந்திதான் (Whale Vomit) அம்பர் என்பது மட்டும் உண்மை.

ஸ்பெர்ம் திமிங்கலங்கள் அன்றாட உணவாக பெரும்பாலும் ஆழ்கடலின் அடிப்பகுதியில் முக்குளித்து சென்று அங்கே பீலிக் கணவாய்களை வேட்டையாடித் தின்பது வழக்கம், கணவாயை விழுங்கும் திமிங்கிலத்தால் கணவாயின் ” ஓட்டை” செமிக்கவைக்க முடியாது, திமிங்கிலக் குடலில் அவை சிக்கிக்கொள்ளும், இந்த செரிமானம் பெறாத பொருளை சுற்றி எண்ணை வடிவப் படலம் ஒன்று உருவாகும், இந்த எச்சத்தை நீண்ட நாட்களுக்கு பிறகு திமிங்கலம் வாந்தியாக வெளியே தள்ளும், இதுவே அம்பர் கிரிஸ் என்று சொல்லப்படுகிறது.

ஸ்பெர்ம் திமிங்கிலத்தின் வயிற்றில் காணப்படும் அம்பர் கிரிஸ்ஸானது மெழுகுத்தன்மையானது. திமிங்கிலம் வாந்தியெடுக்கின்றபோது சிலவேளைகளில் கிலோக்கணக்கான அம்பர்கிறிஸை வெளியேற்றிவிடும், இது ஆரம்பத்தில் துர்நாற்றம் வீசினாலும் காயவிடும்போது மிகுந்த நறுமனமாக மாறக்கூடியது.

பார்ப்பதற்கு அருவருப்பாக காணப்படும் இதை, நெருப்பால் சூடாக்கினால் மணம் கமழும் வாசனை வெளிவரும். இதை எளிதில் அடையாளம் காண முடியாது. பரம்பரையாக கடல் தொழிலில் அனுபவம் உள்ளவர்களால் மட்டுமே காணமுடியும். இது தண்ணீரில் கரையாது. ஆனால் மதுபானங்களில் போட்டால் கரைந்து விடுகிறது.

வாசனைத் திரவியங்கள் தயாரிக்கும் நிறுவனங்கள் இவற்றை பலகோடிகள் கொட்டிக்கொடுத்து வாங்கிச் செல்கின்றன. ஏழை மீனவர்கள் பலர் இந்த அம்பர் கிறிஸால் மிகப்பெரிய பணக்காரர்களாகியுள்ளமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

இதை கொண்டு தயாரிக்கப்படும் வாசனை திரவத்தை துணியில் தடவினால், எத்தனையோ நாட்களுக்கு அதன் வாசனை நிலை கொண்டிருக்கும்.

இலங்கையில் இவ் அம்பர் கிறிஸ் கிடைத்துள்ளமை முதல் தடவை அல்ல, இதற்கு முன்னரும் இவ் அதிர்ஷ்டம் சிலருக்கு கிடைத்துள்ளது.

ஒரு ஊரில் ஒரு பணக்காரர் இருந்தார், அவர் கடற்கரையால் நடந்து சென்றுகொண்டிருந்த போது பலரும் மிகவும் கெட்ட மணம் வருவதாக விலகி சென்ற நிலையில் அவர் இதனை கண்டெடுத்தே பணக்காரர் ஆனதாக சொல்வார்கள், இன்றும் அவர் பெரும் பணக்காரர்தான், முயற்சியால் மேலும், மேலும் நன்கு முன்னேறிய ஒரு செல்வந்தராகவே அவரை நான் பார்க்கிறேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here